சாதாரண மனிதனின் கதை ‘மக்கள் காவலன்’!

Priya
706 Views
1 Min Read

மணி​கண்​டன் நடிப்​பில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம் ‘மக்​கள் காவலன்’. சந்​தோஷ் குமார் எழு​தி, இயக்​கி​யுள்​ளார். வாகை சந்​திரசேகர், ஏ.வெங்​கடேஷ், ஆர்​.கே. விஜய் முரு​கன், சண்​முகம் முத்​து​சாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபா​தா, ஜென்​சன் திவாகர், லல்​லு, ஜெமினி மணி, ரகு உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். பிரதீபன் செல்​வரத்​னம் ஒளிப்​பதிவு செய்​துள்ள இந்​தப்​படத்​துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்​துள்​ளார். பிர்லா ஸ்டூடியோஸ் – நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் டிச.4-ல் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

“கண்​ணி​யத்​துடன் வாழ விரும்​பும் சாதாரண மனிதனின் கதையைப் பேசும் படம் இது. ஆனால், ஊழல் நிறைந்த ஓர் அமைப்​பு, அவரை சரணடைவது அல்​லது எதிர்த்​துப் போராடு​வது என்ற தேர்​வு​களுக்​குள் உந்​தித் தள்​ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்​வதற்​கான போராட்​ட​மாகத் தொடங்​கும் இப்​படம், மிகப்​பெரிய பரி​மாணத்தை எட்​டு​கிறது. இதனால் அவர் ஒரு​போதும் விரும்​பாத ஒரு தலை​வ​ராக மாற வேண்​டிய கட்​டாய சூழல் உரு​வாகிறது. பிறகு என்ன நடக்​கிறது என்று கதை செல்​லும்.

உலகம் விதிக்​கும் எல்​லைகளுக்கு அப்​பால் கனவு காணும் துணிச்​சலை​யும். அந்த எல்​லைகள் முக்​கி​யத்​து​வ​மற்​ற​தாக மாறும் வரை தொடர்ந்து முன்​னேறும் மன உறு​தி​யை​யும் இத்​திரைப்​படம் அழுத்​த​மாகப் பேசுகிறது” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply