பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடக்கம்!

Priya
912 Views
1 Min Read

பா.ராஞ்சித்தின் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சார்பட்டா பரம்பரையின் மூலம் தொடங்குகிறது. ‘சார்பட்டா பரம்பரை 2’ என தெரிவித்துள்ளார். அத்துடன் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் குத்துச்சண்டை நடக்கும் களத்தின் மீது ‘தி ஆரிஜின் ஆஃப் சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ என்ற தலைப்பு உள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தின் நடிர்கர்ள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் இடம் எதுவும் இடம் பெறவில்லை என்றாலும், தயாரிப்பாளர்கள் குறித்த தகவல் உள்ளது. இந்தப் படத்தை கிரிஷ் மாத்ருபூதம், பா.ரஞ்சித், ஆர்யாவின் மனைவி சாவிஷா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘சார்பட்டா பரம்பரை’ முதல் பாகம் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. வட சென்னையில் இருந்த இரண்டு குத்துச் சண்டை பரம்பரைகளுக்கு இடையில் நடந்த மோதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், வட சென்னையின் அன்றைய விளையாட்டு மற்றும் அரசியல் பற்றிப் பேசியது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply