அரசு சார்பில் ஓடிடி வந்தால் சிறந்த முயற்சியாக இருக்கும்: ராதிகா சரத்குமார் நம்பிக்கை

Priya
1007 Views
1 Min Read

தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடத் துறை​களைச் சேர்ந்த தயாரிப்​பாளர் அமைப்​பு​கள் ஒன்​றிணைந்து தென்​னிந்​தி​யத் தொலைக்​காட்சி மற்​றும் ஓடிடி தயாரிப்​பாளர்​கள் சங்​கம் என்ற ஒருங்​கிணைந்த அமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளன. இதை இச்​சங்​கத்​தின் கவுர​வத் தலை​வர் ராதிகா சரத்​கு​மார் தொடங்கி வைத்​தார்.

அவர் பேசும்​போது, “தயாரிப்​பாளர்​கள் கைகட்டி நிற்க வேண்​டிய கால​கட்​டத்​தில் இருக்​கிறோம். அந்த நிலை மாறவேண்​டும். எல்​லோருக்​கும் கவுர​வம் அளித்து செயல்​படு​வதற்​கான முயற்​சி​தான் இந்த அமைப்​பு. படங்​கள் வெற்​றியடைந்​தால் மட்​டுமே ஓடிடி நிறு​வனங்​கள் வாங்​கு​கிறார்​கள். இல்​லை​யென்​றால் பங்​கீடு அடிப்​படை​யில் வாங்​கு​கிறார்​கள். இது​போன்ற நிலை​யில் அரசு சார்​பில் புதிய ஓ.டி.டி. தொடங்​கப்​படும் என்​பது சிறந்த முயற்​சி​யாக இருக்​கும்” என்​றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply