திருச்சி, திருப்பதி உட்பட 11 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க டெல்லியில் இன்று ஆலோசனை

Priya
751 Views
1 Min Read

திருச்சி, திருப்​பதி உட்​பட நாட்​டில் உள்ள 11 விமான நிலை​யங்​களை 5 தொகுப்​பு​களாக பிரித்து தனியார் வசம் ஒப்​படைப்​பது குறித்த முதல்​கட்ட ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் இன்று (அக்.30) நடை​பெறுகிறது.

நாட்​டில் அதிக வரு​வாய் மற்​றும் போக்​கு​வரத்து உள்ள ஒரு பெரிய விமான நிலை​யத்​துடன், குறைந்த வரு​வாய் உள்ள ஒரு சிறிய விமான நிலை​யத்தை இணைத்து தனியார்​வசம் (பொது-தனியார் கூட்டு முறை​யில்) ஒப்​படைத்து உல​கத் தரத்​திலான வசதியை பெறு​வதற்​காக ‘பண்ட்​லிங் மாடல்’ திட்​டத்தை மத்​திய சிவில் விமான போக்​கு​வரத்து அமைச்​சகம் மேற்​கொண்டு வரு​கிறது.

அதன்​படி, இது​வரை 14 விமான நிலை​யங்​கள் தனியார் வசம் ஒப்​படைக்​கப்​பட்டு இயங்கி வரு​கின்​றன.

அடுத்த கட்​ட​மாக நாட்​டில் உள்ள 11 விமான நிலை​யங்​களை 5 தொகுப்​பு​களாக பிரித்து, அதாவது அமிர்​தசரஸ் – காங்க்ரா, வாராணசி – கயா – குஷிநகர், புவனேஸ்​வர் – ஹூப்ளி, ராய்​பூர் – அவுரங்​காபாத், திருச்சி – திருப்​பதி ஆகிய விமான​நிலை​யங்​களை தனியாருக்கு 50 ஆண்​டுகளுக்கு குத்​தகைக்கு விட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

விமான நிலை​யங்​களை நவீனமய​மாக்​கவும், உள்​கட்​டமைப்பை சர்​வ​தேச தரத்​துக்கு உயர்த்​தவும் இந்த நட​வடிக்கை உதவும் என்று கூறப்​படு​கிறது.

இந்த திட்​டத்​தின்​கீழ் விமான நிலை​யத்​தின் இயக்​கம், மேலாண்மை, மேம்​பாடு ஆகிய​வற்றை ஒப்​பந்​ததா​ரர் பராமரிக்க வேண்​டும். இதில், பயணிகள் முனையம், நகர்ப்​புறக் கட்​டிடங்​களை உள்​ளடக்​கிய கட்​டமைப்பு, எல்​லைச்​சுவர், வாக​னங்​கள், அலு​வல​கப் பொருட்​கள், கணினி மென்​பொருள் ஆகியவை அடங்​கும்.

அதேவேளை​யில், வான் போக்​கு​வரத்து கோபுரம், தகவல் தொடர்பு, வழிநடத்​தல், கண்​காணிப்பு சேவை​களை இந்​திய விமான நிலைய ஆணை​யம் தொடர்ந்து வழங்​கும். மேலும், இந்​திய விமான நிலைய ஆணைய சரக்கு தளவாடங்​கள் மற்​றும் இணை சேவை​கள் நிறு​வனம் சலுகை​யாள​ருடன் சேர்ந்து இயங்​கும்.

திருச்சி – திருப்​பதி உட்​பட 11 விமான நிலை​யங்​களை 5 தொகுப்​பு​களாக பிரித்து தனியாருக்கு வழங்​கு​வது குறித்து சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆலோ​சிப்​ப​தற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் இன்று (அக்.30) நடை​பெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply