தென்மண்டல அளவில் மிகச் சிறந்த செயல்பாடு: தமிழக அரசின் ‘டாம்கோ’ அமைப்புக்கு முதல் பரிசு

Priya
583 Views
1 Min Read

தென்மண்டல அளவில் மிகச்சிறப் பாக செயல்​பட்​டதற்​காக தமிழக அரசின் ‘டாம்கோ’ அமைப்​புக்கு முதல் பரிசு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு சிறு​பான்​மையினர் நலத்​துறை அமைச்​சர் ஷாஜகான் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் வசிக்​கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்​கியர், புத்த மதத்​தவர், பார்சி, ஜெயின் ஆகிய சிறு​பான்​மையினரின் பொருளாதார நிலையை மேம்​படுத்​தும் நோக்​கில் டாம்கோ எனப்​படும் தமிழ்​நாடு சிறு​பான்​மையினர் பொருளாதார மேம்​பாட்டுக் கழகம் செயல்​பட்டு வரு​கிறது.

சிறு​பான்மையினரின் சுய வேலை​வாய்ப்பு மற்​றும் வரு​மானம் ஈட்​டும் செயல்​பாடுகளுக்கு குறைந்த வட்​டி​யில் இக்​கழகம் கடனுதவி வழங்கி வரு​கிறது.

தேசிய சிறு​பான்​மையினர் வளர்ச்சி மற்​றும் நிதிக் கழகத்​தில் முகவர்​களாகச் செயல்​படும் தென் மண்​டல மாநிலங்​களுக்​கான ஆய்​வுக் கூட்​டம் ஆந்​திர மாநிலம் விஜய​வாடாவில் கடந்த 9-ம் தேதி நடை​பெற்​றது.

இதில், 2025-26-ம் நிதி​யாண்​டில் தென்​மண்​டல அளவில் மிகச் சிறப்​பாக செயல்​பட்​டதற்​காக தமிழக அரசின் ‘டாம்கோ’ அமைப்​புக்கு முதல் பரிசு பாராட்​டுச் சான்​றிதழ் மற்​றும் கேடயம் வழங்​கப்​பட்​டது.

தேசிய சிறு​பான்​மையினர் வளர்ச்சி மற்​றும் நிதிக் கழகத்​தின் தலை​வர் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் இந்த விருதை தமிழ்​நாடு சிறு​பான்​மையினர் பொருளாதார மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநரிடம் வழங்​கினார்.

தென்​மண்​டல அளவில் முதல்​பரிசு பெற்று சாதனை படைத்த டாம்கோ அமைப்​புக்கு சிறு​பான்​மையினர் நலத்​துறை அமைச்​சர் ஷாஜகான் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply