இலவச பேருந்து பயணம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்

Priya
736 Views
1 Min Read

அரசுப் பேருந்​துகளில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் மாற்​றுத் திறனாளி​களுக்​கும் விரிவுபடுத்தப்பட்டுள்​ளது. அவர்​கள் ‘ஏஐ’ சார்ந்த நவீன உதவி உபகரணங்​கள் வாங்க ரூ.30 ஆயிரம் வரை நிதி​யுதவி வழங்​கவும் தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக மாற்​றுத் திறனாளி​கள் நலத் துறை செயலர் சோ.மது​மதி வெளி​யிட்ட அரசாணைகளில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 40 சதவீதம் மற்​றும் அதற்கு மேல் பாதிப்பு கொண்ட அனைத்து வகை மாற்​றுத் திறனாளி​களும், அவர்​களு​டன் துணைக்​குச் செல்​லும் ஒரு​வரும் சாதா​ரண நகரப் பேருந்​துகளில் மட்​டுமே இல​வச​மாக பயணிக்க அனுமதிக்​கப்​பட்டு வந்​தது.

இந்த நிலை​யில், தற்​போது அரசுப் போக்​கு​வரத்து கழகங்​களின் மாநகர மற்​றும் நகர சாதா​ரண பேருந்​துகள், விரைவுப் பேருந்​துகள், தாழ்​தளப் பேருந்​துகள், எல்​எஸ்எஸ், டீலக்ஸ் (குளிர்​சாதனப் பேருந்​துகள் நீங்​கலாக) மற்​றும் புறநகர், மலைப் பகுதி​களில் இயக்​கப்​படும் சாதா​ரண கட்​டண பேருந்​துகளுக்​கும் இல​வச பயண அனுமதி விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த சலுகையைப் பெற விரும்​பும் மாற்​றுத் திறனாளி​கள், தமிழக அரசால் வழங்​கப்​பட்ட 16 இலக்க எண் கொண்ட அடை​யாள அட்​டையை (யுடிஐடி) நடத்​துநரிடம் காண்​பித்து பேருந்​து களில் பயணிக்​கலாம்.

இத்​திட்ட விரிவாக்​கத்​துக்​காக முதல்​கட்​ட​மாக ரூ.7.90 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு, உடனடி​யாக நடைமுறைக்கு வரும் வகை​யில் ஆணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

ஏஐ உபகரணங்​கள்

மாற்​றுத் திறனாளி​கள் தற்​சார்​புடன் வாழும் வகை​யில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) சார்ந்த மேம்​பட்ட நவீன உபகரணங்​கள், விளை​யாட்டு செயற்கை உறுப்​பு​கள் போன்றவற்றை வாங்​கும்​போது அரசு சார்​பில் மானியம் வழங்​கப்​படும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

உபகரணங்​களின் மொத்த விலை​யில் 50 சதவீதம் அல்​லது அதி​கபட்​சம் ரூ.30 ஆயிரம் வரை (இதில் எது குறைவோ, அந்த தொகை) நிதி​யுத​வியாக வழங்​கப்​படும்.

இத்​திட்​டத்​தின்​கீழ் பயன்​பெற விரும்​பும் மாற்​றுத் திறனாளி​கள், அரசு மருத்​து​வரின் பரிந்​துரையைப் பெற்று உபகரணங்​களை கொள்​முதல் செய்த 60 நாட்​களுக்​குள் உரிய ஆவணங்​களு​டன் மாவட்ட மாற்​றுத் திறனாளி​கள் நல அலு​வல​கத்​தில் விண்​ணப்​பிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply