திருவாலங்காடு – சென்னை சென்ட்ரல் இடையே ஏசி மின்சார ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு

Priya
700 Views
1 Min Read

சென்னை கடற்​கரை – செங்​கல்​பட்டு வழித்​தடத்​தைத் தொடர்ந்து, சென்ட்​ரல் – அரக்​கோணம் மார்க்​கத்​திலும் கடந்த 23-ம் தேதி முதல் ஏசி மின்​சார ரயில் சேவை சோதனை அடிப்​படை​யில் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

வாரத்​தில் சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​கள் தவிர்த்து 5 நாட்​கள் ஏசி மின்​சார ரயில் இயக்​கப்​படு​கிறது. ரயில்வே நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள கட்​ட​ணப் பட்​டியலின்​படி, 51 கி.மீ. முதல் 70 கி.மீ வரையி​லான தொலை​வுக்கு ரூ.100 முதல் ரூ.230 வரை கட்​ட​ணம் நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், திரு​வாலங்​காட்​டில் இருந்து 59 கி.மீ தொலை​வில் உள்ள சென்னை சென்ட்​ரலுக்கு முறைப்​படி, ரூ.105 மட்​டுமே கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​பட வேண்​டும். ஆனால், பயணிகளிடம் ரூ.215 வசூலிக்​கப்​படுவ​தாகப் புகார் எழுந்​துள்​ளது.

டிக்​கெட் கவுன்ட்​டர்​களில் இது குறித்து, பயணிகள் கேள்வி எழுப்​பியபோது, ரயில்வே நிர்​வாகம் கொடுத்த அறி​வுறுத்​தல்​படியே கட்​ட​ணம் வசூலிக்​கப்​படுவ​தாக ஊழியர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

புதிய ஏசி மின்​சார ரயில் சேவைக்கு மக்​களிடையே வரவேற்பு இருந்​தா​லும், சாமானிய மற்​றும் நடுத்​தர மக்​களைப் பாதிக்​கும் வகை​யி​லான இந்த கூடுதல் கட்​ட​ணக் குளறு​படிக்கு பயணிகள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதி​காரி ஒரு​வரிடம் கேட்​டபோது, “ஏசி மின்​சார ரயில் கட்​ட​ணம் கி.மீ. அடிப்​படை​யில் தான் வசூலிக்​கப்​படு​கிறது.

இதில் ஏதேனும் திருத்​தங்​கள் இருந்​தால், உடனடி​யாகச் சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​களின் கவனத்​துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்​படும்” என்று உறுதி​யளித்​துள்​ளார்.

இருப்​பினும், இந்த கட்​ட​ணக் குளறு​படியை உடனடி​யாகச் சரிசெய்து, ஏசி மின்​சார ரயி​லின் ஒட்​டுமொத்த கட்​ட​ணத்​தையும் குறைக்க வேண்​டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply