நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி – நீதிமன்ற உத்தரவால் சிக்கல்

Priya
883 Views
2 Min Read

நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் நியமனங்களுக்கு ரூ.634 கோடி வரை லஞ்சமாக வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத் துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சமாக வசூலிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு அமலாக்கத்துறை ஆதாரங்களு டன் கடிதம் அனுப்பியது.

அதன் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி ஐ.எஸ். இன்பதுரை மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்குகடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

ஆனால் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி இன்பதுரை தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தனது தரப்பு விளக்கங்களைக் கோராமல் உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறி கே.என்.நேருதரப்பிலும், திமுக ஆட்சி காலத்தில் அரசு தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, கே.என்.நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தும், இன்பதுரை தாக்கல் செய்திருந்த அவமதிப்பு மனுவை முடித்து வைத்தும், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற அனு மதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த பிப்.4 அன்று தீர்ப்பை தள்ளிவைத்து பிப்.20 அன்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு பின்னர் ஆட்சேபம் தெரிவித்து மறுஆய்வு மனுவை கே.என்.நேரு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டு மென்றுதான் உத்தரவிட்டுள்ளதேயன்றி, யாருடைய குற்றச்சாட்டு களை யும் உறுதி செய்யவில்லை.

எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது மட்டுமே குற்றச்சாட்டுக்கான நிரூபணமாக கருத முடியாது. விசாரணையின் போது தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மனுதாரருக்கு முழு வாய்ப்புள்ளது.

அமலாக்கத்துறையின் தகவல்களில் கே.என்.நேரு பெயரும் இடம்பெற்றுள் ளது என்பதாலேயே வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டது’’ என அதில் குறிப்பிட்டுள்ளனர். மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட தால் இந்த வழக்கில் கே.என்.நேருவுக்கு சிக்கல் ஏற்பட்டுள் ளதாகக் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply