திருக்குறள் அடிப்படையில் வாழ்க்கை நடத்தினால் உன்னதம்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கருத்து

Priya
3 Views
2 Min Read

இளைஞர்​கள் திருக்​குறளைப் படித்து, அதன் அடிப்​படை​யில் வாழ்க்​கை நடத்​தினால் அது உன்​னத​மான வாழ்க்​கை​யாக அமையும் என சென்னை ஐஐடி இயக்​குநர் வி.காமகோடி தெரி​வித்​துள்​ளார்.

இந்த ஆண்​டுக்​கான காசி தமிழ்ச் சங்​கமம் 5.0 நிகழ்வு வரும் நவ.28-ம் தேதி முதல் டிச.12-ம் தேதி வரை “திருக்​குறள் பயில்​வோம் – திருக்​குறள் அப்​யாஸ் கரேன்” என்ற கருப்​பொருளு​டன் நடை​பெற உள்​ளது.

இது​தொடர்​பாக, வி.காமகோடி “இந்து தமிழ் திசை” நாளிதழுக்கு பிரத்​யேக நேர்​காணல் அளித்​தார்: நடப்​பாண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சி​யில் சென்னை ஐஐடி-யின் பங்​களிப்பு என்ன? காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சிக்கு நாங்​கள் எப்​போதும் தொழில் நுட்ப ஆதரவு வழங்​கு​கிறோம்.

இந்த ஆண்டு நிகழ்​வில் பங்​கேற்க விண்​ணப்​பித்த 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்​வதற்​காக காசி மற்​றும் திருக்குறள் குறித்த இணை​ய வழி விநாடி-வினா போட்​டியை நடத்​தி​யுள்ளோம்.

பிரதமர் மோடி திருக்​குறளைப் போற்​றிப் பல இடங்​களில் பேசி​யுள்​ளார். அதற்​கேற்ப இந்த ஆண்டு கருப்​பொருளும் திருக்​குறளாக அமைந்​துள்​ளது.

விநாடி-வினா மதிப்​பெண்​கள் அடிப்​படை​யிலும், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் இருந்து உரிய பிரதி​நி​தித்​து​வம் இருக்க வேண்​டும் என்ற அடிப்​படை​யிலும் பங்​கேற்​பாளர்​களைத் தேர்வு செய்து, நேர்​காணல் மூலம் நிகழ்ச்சி குறித்து விளக்கி வரு​கிறோம்.

தமிழகத்​தி​லிருந்து எத்​தனை பேர் கலந்து கொள்கிறார்​கள்? தமிழகத்​தி​லிருந்து 7 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​பட உள்​ளன.

முதல் ரயில் நவ.25-ல் கன்​னியாகுமரி​யி​லிருந்து புறப்​பட்டு, சென்னை வழி​யாக வாராணசிக்​குச் செல்​கிறது. தமிழகத்​தி​லிருந்து சுமார் 1,400 பேர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த ஆண்டு திருக்​குறளைக் கருப்பொருளாகத் தேர்ந்​தெடுக்க காரணம் என்ன? பிரதமரின் கனவான ‘உன்​னத பாரதம் 2047’-ஐ உரு​வாக்​கப் போகிறவர்​கள் இன்​றைய இளைஞர்​களே.

அவர்​கள் திருக்குறளைக் கற்று, அதன் நெறிப்​படி வாழ்ந்​தால் நாடு உன்​னத நிலையை அடையும். திருக்​குறள் குறித்து இளைஞர்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்துவதே இதன் நோக்​கம்.

இன்​டர்ன்​ஷிப் பயிற்​சி​யில் எத்தனை பேர் பங்​கேற்கின்றனர் செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனம் மூலமாக, நாடு முழுவதும் ஆயிரம் மாணவர்கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ளனர்.

இவர்​களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் உதவித்​தொகையுடன் திருக்​குறள் ஆராய்ச்சிப் பயிற்சி அளிக்​கப்​பட உள்​ளது. இதன் ​மூலம் உரு​வாக்​கப்​படும் 1,000 கட்​டுரைகள் வழி​யாக நாடு முழுவதும் திருக்​குறள் குறித்த விழிப்புணர்வு ஏற்​படுத்​தப்​படும். மேலும், தொழில்​நுட்ப உதவியுடன் திருக்​குறளுக்கு எனப் பிரத்​யேக​ மொழி மாதி​ரியை உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply