“திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு அஞ்சாமல் துணிந்து எதிர்கொள்ள வேண்டும்” – திருமாவளவன்

Priya
12 Views
1 Min Read

“மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும், ஆதாரங்களையும், சான்றுகளையும், சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.

ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.

உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply