தனியார் பள்ளி முறைகேடு புகாரில் அன்பில் மகேஸை காவலில் விசாரிக்க கோரும் மனு மீது இன்று உத்தரவு

Priya
1 View
1 Min Read

தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் வழங்க கோடிக்​கணக்​கில் லஞ்​சம் வசூலித்ததாக குற்​றம் சாட்​டப்​பட்ட முன்னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் உள்​ளிட்ட மூவரை​யும் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதிக்​கக்​கோரும் மனு மீது சிறப்பு நீதி​மன்​றம் இன்று உத்​தரவு பிறப்​பிக்​கவுள்​ளது.

தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களைப் பெற்​றுத்​தரு​வ​தாகக்​கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்​டில் ஈடு​பட்​ட​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ், முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமார் மற்​றும் அவரது மேலா​ளரான சரவணன் ஆகியோ​ரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

தற்​போது சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார், மீண்​டும் மூவரை​யும் ஒன்​றாக 2 நாட்​களுக்கு காவலில் எடுத்து விசா​ரணை நடத்த அனுமதி கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனு நீதிபதி எல்.எஸ். சத்​தி​யமூர்த்தி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் தரப்​பில் ஆஜரான சிறப்பு வழக்​கறிஞர் 2 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரினார்.

இந்த மனு மீது இன்று (நவ.25) உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என அறி​வித்து மூவரையும் ஆஜர்​படுத்த உத்​தர​விட்​டுள்​ளார். இந்​நிலை​யில் அன்பில் மகேஸூக்கு ஜாமீன் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு மீதான விசா​ரணை நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக நேற்று நடந்​தது.

அப்போது வாதிட்ட வழக்கறிஞர், கைதுக்கு முன்​பாகவும் பின்​பாகவும் அன்​பில் மகேஸிடம் 25 மணி நேரம் போலீ​ஸார் விசா​ரணை நடத்திவிட்​டதாகவும் அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் பதி​யப்​பட்​டுள்ள இந்த வழக்​கில் லஞ்​சம் கொடுத்​தவர்​களை​யும் சேர்க்க வேண்​டும் என்றும் வாதிட்​டனர். அதையடுத்து காவல்​துறை தரப்பு வாதத்​துக்காக நவ.27-க்கு வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply