தூய்மைப் பணியாளர் ஊதியம் குறைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Priya
9 Views
1 Min Read

சென்னை மாநக​ராட்சி தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான ஒரு​நாள் ஊதி​யத்தை ரூ. 832-ல் இருந்து ரூ.762 ஆக குறைத்​ததை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில் மாநக​ராட்சி ஆணை​யர் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக உழைப்​போர் உரிமை இயக்​கத்​தின் மாநிலத் தலை​வர் கு.​பாரதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், “சென்னை மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் 24 ஆயிரம் தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு கடந்த ஏப்​ரல் 1-ம் தேதி முதல் அடுத்​தாண்டு மார்ச் வரை தினக்​கூலி​யாக ரூ. 832 நிர்​ண​யம் செய்து மாவட்ட ஆட்​சி​யர் ஏற்​கெனவே உத்​தர​விட்டு இருந்​தார்.

ஆனால் திடீரென இந்​தக் கூலியை ரூ.762 ஆக குறைத்து கடந்த அக்​.5-ம் தேதி உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த உத்​தரவு முன்​தே​தி​யிட்டு அமல்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால், தூய்​மைப் பணியாளர்கள் தின​மும் ரூ. 70 வீதம் மாதத்​துக்கு ரூ. 2100-ஐ இழக்க நேரிடும்.

எனவே தினக்​கூலி ஊதி​யத்தை ரூ. 832-ல் இருந்து ரூ. 762 ஆக குறைத்து பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்.

மீண்​டும் பழைய ஊதி​ யத்​தையே வழங்​க​வும், பிடித்​தம் செய்​யப்​பட்ட ஊதி​யத்தை வழங்​க​வும் உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி சி.சர​வணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பி்ல் வழக்​கறிஞர் எஸ். குமார​சாமி ஆஜராகி வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி, இதுதொடர்​பாக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் மாநக​ராட்சி ஆணை​யர் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணையை டிசம்​பர் 2-ம் தேதிக்​கு தள்​ளி வைத்​துள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply