அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன் பிறகு படிப்படியாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,195க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுவதால் நகை பிரியர்கள் பெருமூச்சுவிட்டுள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,195க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.10,800க்கும், ஒரு சவரன் ரூ.86,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.215க்கும், ஒரு கிலோ ரூ.2,15,000 விற்பனையாகிறது.

