முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மக்கள் புகார் அளிக்க விரைவில் பிரத்யேக செயலி அறிமுகம்

Priya
39 Views
2 Min Read

முதல்​வர் விஜய் வெற்றி பெற்ற பெரம்​பூர் தொகு​தி​யில் பொது​மக்​கள் புகார் அளிக்க பிரத்​யேக செயலி விரை​வில் அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் திருச்சி கிழக்​கு, பெரம்​பூர் ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

மக்​கள் சேவை தளம்

இந்​நிலை​யில், பெரம்​பூர் தொகுதி மக்​கள் தங்​களது குறை​களை​யும் புகார்​களை​யும் தொகுதி எம்​எல்​ஏ-​வான முதல்​வரிடம் நேரடி​யாகத் தெரிவிக்​கும் வகை​யில் ‘மக்​கள் சேவை தளம்’ என்ற பிரத்​யேக செல்​போன் செயலியை முதல்​வர் விஜய் அறி​முகம் செய்ய உள்​ளார்.

இந்​தச் செயலி மூலம் பெரம்​பூர் தொகுதி மக்​கள் தங்​களின் அடிப்​படைத் தேவை​களான, மின்​சா​ரம், சாலை வசதி, குடிநீர், துப்​புர​வுப்​பணி, கல்வி மற்​றும் மருத்​துவ உதவி​கள், அரசு நலத்​திட்​டங்​கள், வீட்டு வசதி உதவி, வேலை​வாய்ப்​பு, வணி​கம் மற்​றும் சட்​டரீ​தியி​லான ஆவண உதவி​கள், அவசர உதவி​கள் உள்​ளிட்ட அனைத்​துப் பிரச்​சினை​கள் குறித்​தும் நேரடி​யாக முதல்​வரின் கவனத்​துக்​குக் கொண்டு செல்ல முடி​யும்.

பொது​மக்​கள் இந்தச் செயலி மூலம் புகாரைப்​ப​திவு செய்த அடுத்த சில நொடிகளி​லேயே, அது பெரம்​பூர் எம்​எல்ஏ அலு​வல​கத்தை சென்​றடை​யும். புகார் சமர்ப்​பிக்​கப்​பட்​ட​வுடன், அதற்​கான ‘டிக்​கெட் எண்’ புகார்​தா​ரரின் செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக அனுப்​பப்​படும்.

ஒவ்​வொரு புகாரும் முன்​னுரிமை அடிப்​படை​யிலும், தீர்க்​கப்பட வேண்​டிய காலக்​கெடு​வோடும் கண்​காணிக்​கப்​படும். பொது​மக்​கள் தங்​களின் டிக்​கெட் எண்ணை செயலி​யில் உள்​ளீடு செய்​து, புகாரின் தற்​போதைய நிலையை ஆரம்​பம் முதல் தீர்வு வரை நேரடி​யாகக் கண்​காணிக்​கலாம்.

இந்​தச் செயலி மூலம் பெறப்​படும் புகார்​கள் மீது குறைந்​த​பட்​சம் 3 நாட்​களுக்​குள் முதற்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்பட உள்​ளது. மேலும், குடிநீர், மின்​சா​ரம், சாலை மற்​றும் துப்​புரவு போன்ற அத்​தி​யா​வசி​யப் பிரச்​சினை​களுக்கு அதி​கபட்​ச​மாக 10 நாட்​களுக்​குள் முழு​மை​யான தீர்வு காணப்​பட்​டு, அதுகுறித்த விரி​வான பதில் மக்​களுக்கு செயலி வழி​யாகவே வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பெரம்​பூர் தொகு​தி​யில் புதிய சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தில், இச்​செயலியைப் பிரத்​யேக​மாகக் கண்​காணிப்​ப​தற்​கான நவீன கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இந்த செல்​போன் செயலி மற்​றும் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்தை முதல்​வர் விஜய் விரை​வில் தொடங்கி வைக்​க​வுள்​ளார்.

முதல்​வரின் இந்த அதிநவீன ‘டிஜிட்​டல்’ மக்​கள் சேவைத் திட்​டம் பொது​மக்​களுக்​கும் அரசு அதி​காரி​களுக்​கும் இடையே ஒரு பால​மாகச் செயல்​படும் எனவும், பெரம்​பூர் தொகுதி மக்​களின் வரவேற்பை பொறுத்​து, அடுத்​தடுத்து அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​யிலும் இந்த செயலி விரிவுபடுத்​தப்​படும்​ எனவும் தவெக​வினர்​ தெரி​வித்​தனர்​

Share This Article
Leave a Comment

Leave a Reply