தானியங்கி பட்டா மாறுதலில் புதிய நடைமுறை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Priya
106 Views
2 Min Read

தானி​யங்கி பட்டா மாறு​தலை எளிமைப்​படுத்​தும் வித​மான புதிய நடை​முறை​கள் 15 நாட்​களில் அமலாகும் என்று அமைச்​சர் செங்​கோட்​டையன் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து வரு​வாய்த் துறை அமைச்​சர் செங்​கோட்​டையன் வெளி​யிட்ட அறிக்​கை: பட்​டாவை விரைந்து வழங்​கும் வகை​யில், உட்​பிரிவு இல்​லாத சொத்து பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தில் முடிவுற்​றதும், விற்​பனை செய்​பவரின் பெயர், புல எண் மற்​றும் பரப்​பளவு ஆகியவை இணை​யதள பட்​டா​வில் உள்ள பெயர் மற்​றும் இதர விவரங்​களு​டன் ஒன்​றாக இருந்​து, வில்​லங்​கங்​கள் ஏதும் அந்​தச் சொத்​தின்​ மீது இல்​லா​திருப்​பின் அதை வாங்​குபவரின் பெயருக்கு தானி​யங்கி முறை​யில் இணை​ய​வழி​யில் பட்டா மாறு​தல் செய்​துதரப்​படு​கிறது.

தற்​போது அமல்​படுத்​தப்​பட்டு வரும் இந்த நடை​முறை​யில் சில குறை​பாடு​களைக் களைந்​து, உட்​பிரிவு இல்​லாத சொத்தை வாங்​கிய​வரின் பெயருக்கு தானி​யங்கி பட்டா மாறு​தல் சேவையை எளிமைப்​படுத்​து​வதற்​காக சில திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

அதன்​படி இனி நிலத்தை விற்​கும்​போது நில உரிமை​யாளர் (பட்​டா​தா​ரர்) மற்​றும் அவரது மனைவி மற்​றும் பிள்​ளை​கள் போன்ற குடும்ப உறுப்​பினர்​கள் கையொப்​பமிடும் நிகழ்​வு​களி​லும் இனி இந்​தச் சேவையை பயன்​படுத்த வழி​வகை செய்​யப்​படும்.

அதே​போல், ஒரு பட்​டா​தா​ரர் நிலத்தை பொது அதி​கார முகவர் (Power of Attorney) மூல​மாக பதிவு செய்​யும்​போது, விற்​பனை செய்​பவரின் பெயருக்​கும். பட்​டா​தா​ரரின் பெயருக்​கும் பொருத்​தம் இல்​லாமல் இருந்​தா​லும், செல்​லத்​தக்க பொது அதி​கார முகவர் (valid Power of Attorney) என்​ப​தன் அடிப்​படை​யில் தற்​போது இந்த சேவையை பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

மேலும், நிலத்தை வாங்​குபவருக்கு அதே வரு​வாய் கிராமத்​தில் ஏதேனும் நிலம் இருந்​தா​லும், இல்​லா​விட்​டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்​ணுக்கு அடுத்த பட்டா எண் ஒதுக்​கப்​படும். இதன் மூலம் கால​விர​யம் குறை​யும்.

இந்த புதிய நடை​முறை தானி​யங்கி பட்டா மாறு​தல் சாஃப்ட்​வேரில் திருத்​தங்​கள் செய்து 15 நாட்​களுக்​குள் அமல்​படுத்​தப்​படும். இதன்​மூலம் சார்​-ப​தி​வாளர் அலு​வல​கத்​தில் பதிவு செய்​யப்​படும் உட்​பிரிவு அல்​லாத இனங்​களில் தானி​யங்கி முறை​யில் பெரு​வாரி​யான பட்​டாக்​கள் மாறு​தல் செய்​யப்​படும்.

இதனால் பொது​மக்​கள் நிலத்தை பதிவுசெய்த பிறகு பட்டா மாறு​தல் தொடர்​பாக சார்​-ப​தி​வாளர் அல்​லது வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​துக்கோ நேரில் செல்​லும் நிலை தவிர்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply