“திமுகவுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் இபிஎஸ்” – ஆதவ் அர்ஜுனா தாக்கு

Priya
688 Views
1 Min Read

“திமுக-வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக ஒரு கொள்கை கட்சி என சொல்லிக் கொள்கிறது; ஆனால், திமுக எப்போதுமே கொள்கை ரீதியான பிரச்சாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாசம், அவதூறு பிரச்சாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். திமுக-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள்.

தற்போது இருக்கும் அதிமுக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது இல்லை. ஜெயலலிதாவிடம் விசுவாசியாக இருந்தவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறி விட்டார்கள். பாமக இல்லை என்றால் அதிமுக 47 தொகுதிகளில் வென்றிருக்க முடியாது. திமுக-வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் பழனிசாமி.

எடப்பாடி தொகுதியில் எங்கள் வேட்பாளரை பழனிசாமி விலை கொடுத்து வாங்கி, அதிமுகவில் இணைத்துள்ளார். இது குதிரை பேரம் இல்லையா? தற்போது அதிமுகவில் இருவர் தான் இருக்கிறார்கள். ஒன்று, பழனிசாமி, மற்றொன்று அவரது மகன் மிதுன்.

தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் சொத்துகளை அபகரிக்க எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் திட்டமிட்டுள்ளார். மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக உதயநிதியுடன் கைகோத்திருக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி தலைமையிலான அதிமுகவை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். திமுகவின் பிரச்சாரத்தை பழனிசாமி மேற்கொள்கிறார்; திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின். திமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமி. இனிமேல், கொங்கு மண்டலத்தின் முகமாக முதல்வர் விஜய் இருப்பார்” என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply