மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Priya
12 Views
1 Min Read

காவிரி ஆற்று மண்ணில் புதைந்து இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் மேகேதாட்டில் அம்மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நதிநீர் பங்கீடு கிடைக்க பெறாமல் போகும் என்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை 7 மணி முதல் திருச்சி ஓடத்துறை படித்துறையில் காவிரி ஆற்றில் மண்ணில் தங்கள் உடலை புதைத்து கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் விஜய் நவம்பர் 20-ம் தேதி திருச்சி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்கள் கருதி விவசாயிகளிடம் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுமாறும், விவசாயிகளின் கோரிக்கையை நிச்சயமாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் திருச்சி மாநகர போலீஸார் மற்றும் திருச்சி வருவாய் துறை அலுவலர்கள் உறுதியளித்ததை அடுத்து, அந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply