நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.175 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Priya
803 Views
2 Min Read

நக​ராட்சி நிர்​வாகத்​துறை சார்​பில் ரூ.174.97 கோடி​யில் முடிவுற்ற திட்​டப்​பணிகளை தொடங்கி வைத்த முதல்​வர் விஜய், சென்​னை​யில் ரூ.11.15 கோடி​யில் பசுமை வழித்​தடத்​துக்கு அடிக்​கல் நாட்​டினார்.

இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை மாநக​ராட்சி சார்​பில் மணலி மண்​டலத்​தில் ரூ.58.33 கோடி​யில் புனரமைக்​கப்​பட்ட கடப்​பாக்​கம் ஏரி, திரு​விக மண்​டலம் புளியந்​தோப்பு, தட்​டான்​குளத்​தில் ரூ. 35 கோடி​யில் கட்​டப்​பட்ட கழிவுமாற்று நிலை​யம், மணலி, மாத்​தூர் எம்.எம்.டி.ஏ. பகுதி​யில் ரூ.4 கோடி​யில் அமைக்​கப்​பட்ட நீர் உறிஞ்​சும் பூங்கா என ரூ.97.33 கோடி​யில் முடிவுற்ற திட்​டங்​களை முதல்​வர் விஜய் நேற்று காணொலி​யில் தொடங்கி வைத்​தார்.

இது​த​விர, சென்னை விமான நிலை​யப் பகுதி​யில் உள்ள பூங்கா மற்​றும் கிண்டி, கத்​திப்​பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் வரை ரூ.11.15 கோடி​யில் 5.30 கிமீக்கு பசுமை வழித்​தடம் அமைப்​ப​தற்​கான 2 புதிய திட்​டப் பணிகளுக்குமுதல்வர் அடிக்​கல் நாட்​டினார்.

நக​ராட்சி நிர்​வாக இயக்​குநரகம் சார்​பில், மதுரை, விருதாசலம், திட்​டக்​குடி, ராணிப்​பேட்டை, வில்​லிபுத்​தூர், கொமார​பாளை​யம், பொள்​ளாச்சி, வெள்​ளக்​கோவில் பகுதி​களில் ரூ.73.64 கோடி​யில் முடிவுற்ற 8 திட்​டப்​பணிகளை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டக்கு முதல்​வர் விஜய் கொண்டு வந்​தார்.

மேலும், சென்னை குடிநீர் வாரியம் சார்​பில், அமேசான் (Amazon) நிறு​வனத்​தின் சமூகப் பொறுப்பு நிதி​யின் கீழ், ரூ.4 கோடி செல​வில் கோட்​டூர்​புரத்​தில் நாளொன்​றுக்கு 10 லட்​சம் லிட்​டர் (1 MLD) கழிவுநீரைச் சுத்​தி​கரித்து, மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவரும் வகை​யில் நவீன தொழில்​நுட்​பங்​களு​டன்அமைக்​கப்​பட்​டுள்ள கழிவுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யத்தையும் முதல்​வர் திறந்து வைத்​தார்.

நீர்​வளத்​துறை வழங்​கிய 6,000 சதுர அடி நிலப்​பரப்​பில், பக்​கிங்​ஹாம் கால்​வாய் அடை​யாறு ஆற்​றில் கலக்​கும் முகத்​து​வாரப் பகுதி​யில் நவீன தொழில்​நுட்​பங்​களு​டன் இந்​த நிலை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. மேலும், சென்னை மாநக​ராட்​சிக்கு வழங்​கப்​பட்ட “சிறந்த மோட்​டார் அல்​லாத போக்​கு​வரத்து அமைப்​பைக் கொண்ட நகரம்” விருது, மத்​திய அரசின் தூய்மை இந்​தியா இயக்​கத்​தின் கீழ் தமிழகத்​தின் முதல் தூய்மைநகர​மாக தேர்வு செய்​யப்பட்ட தேனி-அல்​லிநகரம் நக​ராட்​சிக்கு “தூய்மை நகரம்” விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த விருதுகளை அதி​காரி​கள் முதல்​வரிடம் காண்​பித்து வாழ்த்து பெற்​றனர்.

நிகழ்​வில், தலை​மைச்​செயலர் சாய்​குமார், துறை​யின் செயலர் ககன்​தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் த.ஆனந்த், நக​ராட்சி நிர்​வாக இயக்​குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply