நடிகை சமந்தா ரூத், இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தத் தகவலை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் குழந்தையின் விரல் பற்றி இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், ‘எங்களின் அழகான ஆண் குழந்தை. தேவ் நிடிமோரு. எங்களின் இதயம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் மகிழ்ச்சி அடைகின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சமந்தா, ‘தி ஃபேமிலி மேன்’ இரண்டாவது சீசனில் நடித்தபோது இயக்குநர் ராஜை அவர் முதல் முதலாக சந்தித்ததாக கூறப்படுகிறது.
டிகே – ராஜ் கூட்டணி இயக்கிய ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடரில் சமந்தா மீண்டும் இணைந்த போது அவரும் ராஜுவும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் 2025-ல் கோயம்புத்தூரில் உள்ள லிங்க பைரவர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
நடிகை சமந்தா, ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில் தனது கர்ப்ப வயிறுடன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பல பொது நிகழ்ச்சிகளில் அவ்வாறே கலந்து கொண்டார். சோனி விழாவில் ‘செலிபிரட்டி மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். தனது கர்ப்ப காலத்தில் பல பதிவுகளை தொடர்ந்து அவர் சமூக வலை தளத்திலும் பகிர்ந்து வந்தார்.

