தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் காவல் நீட்டிப்புக்காக அவர் சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அன்பில் மகேஸின் நீதிமன்ற காவலை டிச.2 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், கார் ஓட்டுநர் சரவணனை, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் நேற்று மாலை நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

