தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு

Priya
1546 Views
1 Min Read

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.15) பவுனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,040-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.1,12,320-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,316-க்கும், ஒரு பவுன் ரூ.1,22,528-க்கும் விப்றனையாகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த 1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது.

இந்நிலையில், சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. பின்னர் வாரத்தின் முதல் நாளான நேற்று (செப்.14) 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,000-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று தொடர்ந்து 2-வது நாளாக மேலும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply