முதல்வர் விஜய் நவ.3-ல் ஈரோடு வருகை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

Priya
701 Views
2 Min Read

பெருந்துறையில் வரும் 3-ம் தேதியன்று நடைபெறவுள்ள நிகழ்வில் முதல்வர் விஜய் பங்கேற்று, 12 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு நலத் திட்டங்களை வழங்க உள்ளதாக அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில், உலக போலியோ தினத்தையொட்டி, பள்ளிகளுக்கு இடையேயான ஒருநாள் கைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. தமிழக கைத்தறித் துறை அமைச்சர் விஜய்பாலாஜி பங்கேற்று கைப்பந்து விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வரும் 3-ம் தேதி 12 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இந்த நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சம் எதுவும் இல்லாத காரணத்தால், இல்லாத பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தாங்கள் இருப்பதை காண்பிக்க திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

மின்வெட்டு என்பது தொழில்நுட்பக் கோளாறால் தவிர்க்க முடியாதது. இது இயல்பானதுதான். இதையறிந்துதான் பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் செய்த தவறின் காரணமாகவும், ஆதாரங்கள் இருப்பதன் காரணமாகவும் தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில், அவர்கள் ஏன் முன் ஜாமீன் பெற நீதிமன்றம் செல்ல வேண்டும்?

தமிழக அரசு யாரையும் பழிவாங்கவில்லை. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் விற்பனை இலக்கை எட்டி வருகிறது. கடந்த காலங்களைவிட வருவாய் கூடி உள்ளது. தமிழக முதல்வர் விஜய் மீது மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளதால், எந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும், தவெகதான் வெற்றி பெறும். இடைத்தேர்தல்களில் வாக்குக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், திருமங்கலம் பார்முலாவை உடைத்து பெரிய வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றுள்ளது” என்றார். அப்போது, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உடனிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply