“கையாலாகாத அரசு என தெரிந்து சிறையில் இருந்து கைதிகள் ஓட்டம்” – உதயநிதி தாக்கு

Priya
599 Views
1 Min Read

“தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதல்வர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா, சேலமா எனக் கைதிகள் இன்கி பின்கி பான்கி போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு டம்மி முதல்வரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.

தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதல்வர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.

இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதல்வர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும். ‘மெத்’ அரசின் மெத்தனப் போக்கால் தமிழக மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply