தமிழகத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் அத்தியவாசியமான 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை ரூ.200-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இந்தத் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் சென்னை செங்குன்றத்தில் உள்ள மருதம் கூட்டுறவு சிறப்பங்காடியில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதில் கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, புளி தலா 250 கிராம், கடுகு, மிளகாய், உளுந்தம் பருப்பு தலா 100 கிராம், தனியா, பூண்டு தலா 150 கிராம், சீரகம், சோம்பு தலா 50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடை கொண்ட 10 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொகுப்பு மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் உள்ள 128 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும். முதல்கட்டமாக தருமபுரி, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நேற்று விற்பனை தொடங்கியது.
எஞ்சிய மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 31) முதல் விற்பனை தொடங்கும். இதுதவிர மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு விற்பனை நிலையங்களில் மற்ற பல சரக்குகளின் விலை 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

