10ஆம் வகுப்பைப் பொறுத்தவரை 94.31 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மார்ச்/ ஏப்ரல் 2026இல் நடைபெற்ற 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் 94.31 சதவீத மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர்; இதில் மாணவிகள் 96.47 சதவீதமும், மாணவர்கள் 92.15 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் இணையதளம், செல்போன், வாட்ஸப் எண், டிஜி லாக்கர், பள்ளிகள் ஆகியவற்றின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்
10ஆம் வகுப்பைப் பொறுத்தவரை 94.31 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்குள்ள மாணவர்கள், 97.75 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
Top 5 மாவட்டங்கள் தேர்ச்சி விகிதம் (மொத்தப் பள்ளிகள்)
- 97.57 % – புதுக்கோட்டை
- 97.54 %- சிவகங்கை
- 97.41 %- தஞ்சாவூர்
- 97.31 %- திருச்சி
- 97.30 %- கன்னியாகுமரி
அடுத்தடுத்த இடங்களில் எந்தெந்த மாவட்டங்கள்?
மாவட்டம்- தேர்ச்சி விகிதம்
ராமநாதபுரம் – 97.28 %
கோயம்புத்தூர் – 97.09 %
ஈரோடு – 97.03 %
தூத்துக்குடி -96.60 %
நீலகிரி -96.32 %
திருப்பூர் -96.28 %
தேனி – 96.15 %
திண்டுக்கல் -96.08 %
விருது நகர் – 96.02 %
நாமக்கல் – 96.01 %
தென்காசி – 95.60 %
திருநெல்வேலி -95.4 %
பெரம்பலூர் – 95.11 %
மதுரை – 94.91 %
காஞ்சிபுரம் – 94.61 %
கடலூர் – 94.22 %
சேலம் – 94.21%
தர்மபுரி – 93.94%
திருவாரூர் -93.80%
திருப்பத்தூர்- 93.52%
கள்ளக்குறிச்சி- 93.43%
நாகப்பட்டினம் – 93.36%
திருவள்ளூர் – 92.75%
சென்னை – 92.34%
கரூர் – 92.21%
செங்கல்பட்டு – 92.15%
வேலூர் – 92.03%

