மீண்டும் எகிறும் தங்கம் விலை..

Priya
3 Views
1 Min Read

நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 15,360 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது

நகை பிரியர்கள் எதிர்பார்க்காத அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது. (நவம்பர் 23) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,600க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,715க்கும், சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,485க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.76,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.175க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply