இரு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் 8,502 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார்.
இதன்படி சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 14,04,968 பேர், பெண் வாக்காளர்கள் 15,09,040 பேர், இதர வாக்காளர்கள் 900 பேர் என மொத்தம் 29,14,908 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 4,079-ல் இருந்து 4,070 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏப்.1-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 28,93,505 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 21,403 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நவ.12 முதல் டிச.11-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த விண்ணப்பிக்கலாம். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இரு நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5,156 விண்ணப்பங்களும், வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்க்க தியாகராய நகர் தொகுதியில் ஒரு விண்ணப்பமும், பெயர் நீக்கம் கோரி 132 விண்ணப்பங்களும், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த 3,213 விண்ணப்பங்களும் என மொத்தம் 8,502 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 6,804 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நவ.29-ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

