‘மருந்து உறைகள் சர்ச்சை; திமுகவின் நேர்மையற்ற செயல்’ – அமைச்சர் வன்னி அரசு கண்டனம்

Priya
780 Views
1 Min Read

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் 106 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவை சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு நேற்று வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் மானூரில் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் நிலைபாடு இரு மொழி கொள்கைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆட்சியில் (திமுக) அச்சடிப்பட்ட உறைகள்தான் வழங்கப்பட்டுள்ள என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெளிவாக தெரிவித்திருக்கிறார். உறை வழங்கப்பட்டதால் ‘இருமொழி கொள்கை’ என்ற ‘பவர்’ போய்விடாது. நீங்களே (திமுக) செய்துவிட்டு, இங்கு திரித்துவிடுவது என்பது நேர்மையற்ற செயலாகும். இவ்வாறு கூறினார்.

திடீர் மின்தடை: அமைச்சர் வன்னி அரசு பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால் அதிகாரிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் கொடுக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply