தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால் விஜய் அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Priya
5 Views
1 Min Read

தீபத்​தூணில் தீபமேற்​றச் சொன்​னால், விஜய் அரசுக்கு ஏன் எரி​கிறது என்று பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

இது​குறித்து அவரது எக்ஸ் தள பதி​வு: தீபத்​தூணில் தீபமேற்றச் சொன்​னால், விஜய் அரசுக்கு ஏன் இப்​படி எரி​கிறது, உச்ச நீதி​மன்ற உத்​தரவை, ‘மறு ஆய்வு’ கோரி மனு தாக்​கல் செய்​திருக்​கும் தவெக அரசின் இந்து விரோதப் போக்கை வன்​மையாகக் கண்​டிக்​கிறேன்.

கோயிலுக்​குச் சொந்​த​மான இடத்​தில் தீபம் ஏற்​று​வதற்கு, விஜய் ஏன் இத்​தனை பதறுகிறார்? உச்ச நீதி​மன்ற உத்​தரவை மதித்து, பிற அமைப்​பு​கள் எல்​லாம் அமைதி காக்​கை​யில், தவெக அரசு மட்​டும் எதற்கு இப்​படி முந்​திக் கொண்டு மறு ஆய்வு மனு தாக்​கல் செய்​கிறது, கோயில் சொத்​துக்​களைப் பாது​காக்க வேண்​டிய இந்து சமய அறநிலை​யத் துறையே, கந்​தர் மலையை ‘சிக்​கந்​தர்’ மலை​யாக மாற்​றத் துடிக்​கிறதா, வாக்கு வங்கி அரசி​யலுக்​காக விஜய் இந்​தளவுக்​குத் தரம் தாழ்ந்து போக வேண்​டுமா? முருக பக்​தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் விஜய்க்கு ஒருபோதும் மன்​னிப்பே கிடை​யாது.

அனைவருக்​குமான ஆட்சி என்று கூறிக் கொண்டு, வழிபாட்டு உரிமை​களைத் திட்​ட​மிட்டு பறிக்​கும் விஜய்​யின் தலை​மையி​லான இந்து விரோத அரசுக்கு, முருக பக்​தர்​கள் பாடம் புகட்​டுவார் கள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply