‘அப்பா குட்டி’க்காக விஜய் ஆண்டனியின் ரயில் பயணம்

Priya
1 View
1 Min Read

தனது ‘அப்பா குட்டி’ படத்துக்காக வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்து வரும் விஜய் ஆண்டனி, அப்படத்தின் புரமோஷனுக்காக ரயில் பொது மக்களுடன் பயணம் செய்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘அப்பா குட்டி’ படம் நேற்று (நவம்பர் 20) வெளியானது. திரையாரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான விஜய் ஆண்டனி பொது மக்களுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும் கோவை விரைவு வண்டியில் முன்பதிவில்லா பெட்டியில் அவர் பயணம் செய்தார்.

இந்தப் பயணத்தின்போது உடன் பயணித்த சக பயணிகளுடன் இயல்பாக உரையாடினார். மதியம் கோவை சென்றடையும் விஜய் ஆண்டனி,கோவையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் ‘அப்பா குட்டி’ படம் பார்க்கிறார்.

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருக்கும் படம் ‘அப்பா குட்டி’. இப்படத்தை மு.மாறன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனியுடன் பிரீத்தி அஸ்​ராணி, பேபி லிதன்​யா, பகவதி பெரு​மாள், ஹரிப்​பிரி​யா, அருவி மதன், சித்ரா லட்​சுமணன் உள்​ளிட்ட பலர் முக்​கியக் கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ராஜீவ் ரவீந்திரன் ஒளிப்​ப​திவு செய்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply