‘தமிழ் கலாச்சாரம் நாகரிக பயணத்தை செழுமையாக்கியது’ – தமிழ்நாடு நாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

Priya
725 Views
3 Min Read

தமிழ்​நாடு நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த பிரதமர் மோடி ‘தமிழ் கலாச்​சா​ரம் நாட்​டின் நாகரிக பயணத்தை செழு​மையாக்கி உள்​ளது’ எனத் தெரி​வித்​தார். இதேபோல் குடியரசுத் தலை​வர், முதல்​வர் உள்​பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு: தமிழகம், கர்​நாடகா, கேரளா, ஆந்​திரா உள்​ளிட்ட மாநிலங்​கள் உரு​வான நாளில் அப்​பகுதி மக்​களுக்கு எனது வாழ்த்​துகளை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்.

வளமான கலாச்​சார பாரம்​பரியமும், பன்​முகத்​தன்மை மரபு​களும் கொண்ட இந்த மாநிலங்​கள் இந்​தி​யாவின் வளர்ச்​சியை உந்தி செலுத்​து​வதில் முக்​கிய பங்கு வகித்​துள்​ளன. இந்த மாநில மக்​களின் நல்​வாழ்வு செழிக்​கட்​டும்.

பிரதமர் மோடி: தொழில்​முனைவோடும், கடின உழைப்​புடனும் இந்​தி​யாவின் வளர்ச்சிக்குமகத்​தான பங்​களிப்பை வழங்கியுள்ள தமிழக மக்​களுக்கு

தமிழ்​நாடு தினத்​தில் மனம்நிறை நல்​வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன் தமிழ் கலாச்​சா​ரம் நாட்​டின் நாகரிக பயணத்தை பல வழிகளில் செழு​மையாக்​கி​உள்​ளது.

இந்​நன்​னாள் தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு​வருக்​கும் இன்​றும், எதிர்​காலங்​களிலும் மகிழ்ச்​சி​யையும், வெற்​றியையும், புதிய வாய்ப்​பு​களை​யும் வாரி வழங்​கட்​டும்.

மக்களவை எதிர்க்​கட்சித் தலைவர் ராகுல்​காந்தி: தமிழகம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களின் அதன் நிறு​வன நாளில், அங்​குள்ள மக்​களுக்கு எனது வாழ்த்​துகள். அவர்​களின் வளமான கலாச்​சா​ரம், மொழி மற்​றும் பாரம்​பரியம் இந்​தி​யாவின் ஆன்​மாவை செதுக்​கி​யுள்​ளன. அவை தொடர்ந்து செழித்​தோங்​கவும், முன்​னேறவும், ஒன்​று​பட்ட தேசத்தை உரு​வாக்க பங்​காற்​றவும் வேண்​டு​கிறேன்.

ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர்: தமிழ்​நாடு நாளில் தமிழக மக்​கள் அனைவருக்​கும், இந்​தி​யாவின் பல்​வேறு மாநிலங்​களி​லும் உல​கெங்கிலும் வாழும் தமிழர்​கள் அனைவருக்​கும் எனது உளமார்ந்த நல்​வாழ்த்​துகள்.

முதல்​வர் விஜய்: மொழிவாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்டு, தமிழகம் உரு​வான இந்​நாளில் தமிழகத்​தின் தனிப்​பெரு​மை​களை​யும், வரலாற்​றுச் சிறப்​பு​களை​யும் போற்றி மகிழ்​வதோடு, அனைவருக்​கும் தமிழ்​நாடு நாள் நல்​வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

வரலாற்று சிறப்​புமிக்க இந்​நன்​னாளில், தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்​களின் கலை, பண்​பாடு மற்​றும் பாரம்​பரியத்தை பேணிக்​காத்து, நமது மாநிலத்​தின் பெரு​மை​களை தொடர்ந்து நிலைநிறுத்த உறுதி​யேற்​போம்.

அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி: வீரத்​திலும், அறி​விலும், கலை பண்​பாட்​டிலும், சமூக கல்வி, தொழில் முன்​னேற்​றத்​திலும் சிறந்து விளங்​கும் நம் தமிழகம் அனைத்து துறைகளி​லும் மேலும் பல உயரங்​களை தொட்டு, உலக அரங்​கில் தனிப்​பெரு​மையுடன் திகழ ஓரணி​யாய் நின்று உழைக்க இந்​நன்​னாளில் உறுதி​யேற்​போம்.

தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன்: ஊழல், நிர்​வாகச் சீர்​கேடுகள் மற்​றும் இளைஞர்​களை சீரழிக்​கும் போதைக் கலாச்​சா​ரத்​தில் இருந்து தமிழகத்தை மீட்​டெடுத்து, பெண்​களின் பாது​காப்​பும், இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்பும், சமச்​சீரான தொழில்​துறை வளர்ச்சி நிறைந்த ‘வளர்ந்த தமிழகம்’ படைக்க உறுதி​யேற்​போம்.

மதிமுக பொதுச்​செய​லா​ளர் வைகோ: தமிழகம் உரு​வாக்​கப்​பட்ட நவ.1-ம் தேதியை பெரு​மைப்​படுத்​தும் வகையில் ஆண்​டுதோறும் ‘தமிழ்​நாடு

நாள்’ கொண்​டாடப்​பட உள்​ளது வரவேற்​கத்​தக்​கது. அதேபோல் சென்னை மாகாணத்​துக்கு தமிழ்​நாடு என்று பெயர் சூட்ட ஜூலை 18-ம் தேதி சட்​டப்​பேரவை​யில் தீர்​மானம் நிறைவேற்​றிய நாளை​யும் தமிழக அரசு கொண்​டாட வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: ‘தமிழ்​நாடு நாள்’ எது என்​ப​திலேயே குழப்​பங்​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வந்த நிலை​யில், பாமக வலியுறுத்​தலை ஏற்று நவ. 1-ஐ தமிழ்​நாடு நாளாக கொண்​டாடப்​படும் என்று அரசு அறி​வித்​திருப்​பதே நல்ல தொடக்​கம்தான்.

தேமுதிக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா: தமிழ் மொழி​யின் பெரு​மையையும், தமிழர்​களின் பண்​பாட்​டையும் போற்​றும் இந்​நாளில், உல​கெங்​கும் வாழும் அனைத்து தமிழ் சொந்​தங்​களுக்​கும் இனிய தமிழ்​நாடு நாள் நல்​வாழ்த்​துகள்.

இதேபோல் விசிக தலை​வர் திரு​மாவளவன், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், தமாகா தலை​வர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், வீ த லீடர்ஸ் தலை​வர் கே.அண்​ணா​மலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply