ஆட்டோ புதிய கட்டணம் விரைவில் வெளியிடப்படும்: போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

Priya
12 Views
1 Min Read

தமிழகத்​தில் ஓடும் ஆட்​டோக்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு மீட்டர் கட்​டணம் மாற்றி அமைக்​கப்​பட்​ட நிலையில் 13 ஆண்​டு​கள் ஆகி​விட்​ட​தால் ஆட்டோ கட்​ட​ணத்தை உயர்த்தக்கோரி, ஆட்டோ தொழிற்​சங்​கங்​கள் பல்​வேறு கட்ட போராட்​டத்தை நடத்தி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஆட்டோ கட்​ட​ணம் மாற்றியமைப்​பது தொடர்​பாக முத்​தரப்புபேச்​சு​வார்த்​தை, கிண்​டி​யில் உள்ள போக்​கு​வரத்து ஆணை​யரக அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

போக்​கு​வரத்து துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில், போக்​கு​வரத்து ஆணை​யர் பாஸ்கர பாண்​டியன், தொமுச தலை​வர் நடராஜன், தமிழ்​நாடு ஆட்​டோ தொழிலா​ளர் சம்​மேளனத்​தில் செயல் தலை​வர் பாலசுப்​ரமணி​யம், உரிமை குரல் ஓட்​டுனர் சங்க பொதுச்​செய​லா​ளர் ஜாஹிர் ஹுசேன் உட்பட 30 தொழிற்​சங்​கங்​களை சேர்ந்த நிர்வாகி​கள் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில், தொழிற்​சங்​கங்​கள் தரப்​பில், ஆட்​டோவுக்கு குறைந்​த​பட்ச கட்​ட​ணம் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆக இருக்க வேண்​டுமென​வும், அடுத்து ஒவ்​வொரு கிலோ மீட்​டருக்​கும் ரூ.30 வரை கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​ய​வும் வலி​யுறுத்​தினர்.

மேலும், தனி​யார் செயலி வாயி​லாக இயக்​கப்​படும் வாடகை வாக​னங்​களை முறைப்​படுத்​த​வும் வேண்​டு​கோள் விடுத்​தனர். இதேபோல், நுகர்​வோர் அமைப்​பு​களின் நிர்​வாகி​கள் தரப்​பில், ஆட்​டோவுக்கு குறைந்​த​பட்ச கட்​ட​ண​மாக ரூ.50 நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என கோரிக்கை விடுத்​தனர்.

பேச்​சு​வார்த்​தைக்குப் பின்​னர் அமைச்​சர் பார்த்​திபன் செய்​தி​யாளர்களிடம் கூறுகை​யில், “ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்​வா​தாரத்தை காப்​பாற்ற ஆட்டோ​வில் மீட்​டர் பொருத்தி முதலில் இயக்க இருக்​கி​றோம்.

இது மக்​கள் சம்​பந்​தப்​பட்​டது என்பதால் முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு சென்று ஆலோ​சித்து ஆட்​டோ கட்​டண நிர்​ண​யம் விரை​வில் அறிவிக்​கப்​படும்​” என்​று தெரி​வித்​தார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply