சிம்புதேவனின் ‘நவோரியா’ டிச.18-ல் ரிலீஸ்

Priya
2 Views
1 Min Read

சிம்புதேவன் இயக்கத்தில் விமலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நவோரியா’ திரைப்படம் டிசம்பர் 18 அன்று வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, விமல் ஆதியாகவும், அன் ஷீத்தல் அபியாகவும், ஆரி அர்ஜுன் கவுதம ராஜேந்திரனாகவும் நடிக்கின்றனர். இந்தப் படம் டிசம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் தோற்றமும் அதனைத் தொடர்ந்து டீசரும் வெளியானது. 1.23 நிமிடங்கள் ஓடும் அந்த டீசரில், தனது நண்பர்கள் குழுவுடன் சொந்த ஊருக்கு வரும் விமல், அவர்களுடன் அங்குள்ள ஒரு குகைக்குச் செல்கிறார். அங்கு அவர்கள் சந்திக்கும் சாமியார், ஒரு நோக்கத்துக்காக ‘நவோரியா’ என்கிற சக்தி அவர்களை தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், அதை நிறைவேற்றத் தவறினால் அவர்கள் கல்லாக மாறி விடுவார்கள் என்றும் கூறுகிறார்.

சிம்புதேவனின் முந்தைய படங்களைப் போல ஒரு மாய உலகம், நகைச்சுவை அனுபவத்தை இப்படமும் தரும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது இந்த டீசர்.

டிசிபி ட்ரீம் ஹவுஸ் மற்றும் சிம்புதேவன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் விமல், அன் ஷீத்தல், ஆரி அர்ஜுன், வடிவுக்கரசி, பாலாஜி சக்திவேல், பாலசரவணன், நிழல்கள் ரவி, தம்பி ராமையா, அப்புகுட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியை எம்.சுகுமாரும், படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங்கும் மேற்கொள்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். படம் டிசம்பர் 18 அன்று வெளியாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply