தமிழக காவல் துறையில் புதிதாக இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்

Priya
728 Views
3 Min Read

தமிழக காவல் துறை​யின் புதிய மின்​னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) வசதியை டிஜிபி அலு​வல​கத்​தில், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

தமிழக காவல்​துறை இணை​யதளம் மூலம் பொது​மக்​கள் ஏற்​கெனவே புகார் அளிக்​கும் வசதி இருந்து வரு​கிறது. ஆனால், புகாருக்​கான சிஎஸ்ஆர் நகலைப் (புகார் அளித்​ததற்​கான ஒப்​புகை) பெறு​வதற்கு காவல் நிலை​யத்​துக்கு நேரில் செல்ல வேண்​டிய நிலை இருந்​தது. பொது​மக்​களின் இந்த சிரமத்​தைப் போக்​கும் வகை​யில் தற்​போது இ-சிஎஸ்ஆர் (e-CSR) வசதி அறி​முகப்​படுத்​தப்பட்​டுள்​ளது. இதன்மூலம் இனி வீட்​டில் இருந்​த​படியே தங்​களது புகார்​களை இணை​யதளம் வழி​யாகப் பதிவு செய்​ய​லாம்.

இதற்​காக தமிழ்​நாடு காவல்​துறை இணை​யதளமான https://www.police.tn.gov.in என்ற முகவரிக்​குச் சென்று, அதில் உள்ள ‘Register Complaint / e-CSR’ என்ற வசதி​யைத் தேர்வு செய்து புகாரை பதிவு செய்ய வேண்​டும். புகார் பதிவு செய்​தவுடன், அது தானாகவே இ-சிஎஸ்ஆர் ஆக பதிவு செய்​யப்​பட்டு, தனித்​து​வ​மான இ-சிஎஸ்ஆர் எண்​ணுடன் கூடிய ஒப்​புகை குறுஞ்​செய்தி மூலம் உடனடி​யாக புகார்​தா​ரரின் செல்​போனுக்கு அனுப்​பப்​படும். அதன்​பிறகு, அந்​தப் புகார் சம்​பந்​தப்​பட்ட காவல் நிலை​யத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு விசா​ரணை தொடங்​கப்​படும்.

புகார் மீது எடுக்​கப்​பட்ட நட​வடிக்​கைகளின் விபரங்​களை பொது​மக்​கள் காவல்​துறை இணை​யதளத்​தில் உள்ள ‘சிட்​டிசன் போர்​டல்’ பகுதி​யில் தெரிந்து கொள்​ளலாம். பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதிரான குற்​றங்​ கள் தொடர்​பான புகார்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும்.

இதற்​காக தனி கண்​காணிப்பு ‘டேஷ்​போர்டு’ (Dashboard) அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் இ-சிஎஸ்ஆர் புகார்​கள் மற்​றும் அவற்​றின் மீது எடுக்​கப்​படும் நட​வடிக்​கைகளை உயர் காவல்​துறை அதி​காரி​கள் தொடர்ந்து கண்​காணிப்​பார்​கள். யார் மீதேனும் பொய் புகார் அளிக்க நினைத்​தால், காவல் நிலைய விசா​ரணை​யில் தெரிந்து விடும். மேலும், பொய் புகார் அளித்​தவர் மீதும் நட​வடிக்கை எடுக்​கப்​படும்.

அவசரகால உதவிக்கானதல்ல…

இ-சிஎஸ்ஆர் வசதி என்​பது அவசரகால உதவிக்​கானது அல்ல. அவசரநிலை​யில் இருப்​பவர்கள் உடனடி​யாக காவல்​துறையின் 100 அல்​லது 112 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்​டும். அவசர உதவி தேவைப்​படும் பெண்​கள், 1091 என்ற மகளிர் உதவி எண்​ணை​யும் தொடர்பு கொள்​ளலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தலா 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்தார்.

இந்நிகழ்ச்​சி​யில் மாநில குற்ற ஆவணக் காப்​பக டிஜிபி சஞ்​சய் மாத்​தூர், சட்​டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் கலந்து கொண்​டனர்.

சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பாதுகாப்பு

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து வருகிறோம். குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பிரச்சினைக்குரிய நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,919 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம் மட்டுமே ரவுடி கொலை நடைபெறுகிறது. 90 சதவீத கொலைகள் குடும்ப விவகாரம் உள்பட பல்வேறு காரங்களால் நடைபெறுகிறது. செஞ்சியில் காணாமல் போன சிறுமி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். தமிழகத்தில் குற்றங்

களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை, போதைப்பொருள் தடுப்பு, ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply