ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து

Priya
19 Views
1 Min Read

ஆஸ்திரேலியா – இங்​கிலாந்து அணிகள் இடை​யி​லான கடைசி மற்​றும் 3-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 48.3 ஓவர்​களில் 328 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. பென் டக்​கெட் 115 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 15 பவுண்​டரி​களு​டன் 133 ரன்​கள் விளாசினார். வில் ஜேக்ஸ் 59 ரன்​கள் எடுத்​தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்​பில் ஜேக் எட்​வர்ட்ஸ் 4, மேட் ரென்ஷா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 329 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்​களில் 231 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக மேட் ரென்ஷா 55, ஜேக் எட்​வர்ட்ஸ் 31 ரன்​கள் சேர்த்​தனர். இங்​கிலாந்து அணி சார்​பில் சோனி பாகர் 4, லியாம் டாவ்​சன் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்​கிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் போட்​டி​யில் ஆஸ்திரேலிய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி 135 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​திருந்​தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply