சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்

Priya
8 Views
1 Min Read

குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட நிலை​யில், முதல்​வர் விஜய்க்கு நன்றி தெரி​வித்​தார்.

சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யும், பிரபல யூடியூபரு​மான சவுக்கு சங்​கர், கடந்த ஏப்​.9-ம் தேதி குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

புதிய அரசு அமைந்​துள்ள நிலை​யில், சவுக்கு சங்​கர் மீதான குண்​டர் சட்​டத்தை தமிழக அரசு கடந்த புதன்​கிழமை ரத்து செய்து உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து நேற்று விடுவிக்​கப்​பட்​டார்.

வெளியே வந்த அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுகவை மக்​களே தூக்கி எறிந்து விட்​டனர். கொளத்​தூரில் மு.க.ஸ்​டா​லினை தோல்​வி​யுற செய்​ததன் மூலம், மக்​கள் அற்​புத​மான தீர்ப்பை வழங்​கி​யுள்​ளனர்.

வழக்​க​மாக ஆலோ​சனை வாரி​யத்​துக்கு சென்று ஆஜரான பிறகு, குண்​டர் தடுப்​புச் சட்​டத்தை ரத்து செய்​தால், அந்த உத்​தரவு சிறைக்கு வந்து சேர 10 நாட்​களுக்கு மேல் ஆகும். என் விவ​காரத்​தில் கடந்த திங்​கட்​கிழமை ஆலோ​சனை வாரி​யத்​துக்கு முன்பு ஆஜரானேன்.

தொடர்ந்து புதன்​கிழமை (நேற்று முன்​தினம்) தமிழக அரசு குண்​டர் தடுப்பு சட்​டத்தை ரத்து செய்​து, அதற்​கான அரசாணையை சிறைக்கு அனுப்​பியது. உடனே நான் சிறை​யில் இருந்து விடு​வுக்​கப்​பட்​டேன்.

முதல்​வர் விஜய்யே இவ்​விவ​காரத்​தில் தலை​யிட்​ட​தால் இது சாத்​தி​ய​மானது. இதற்​காக முதல்​வர் விஜய்க்​கும், நீதி​மன்​றங்​களுக்​கும் நன்​றி. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply