கோயில் பணியாளர் தேர்வுக்கு புதிய வாரியம்: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

Priya
645 Views
2 Min Read

கோ​யில் பெண் ஊழியர்​களுக்கு மகப்​பேறு விடுப்பு 12 மாதங்​களாக உயர்த்​தப்​படும் என்​றும், கோயில் பணி​யாளர்​களை தேர்வு செய்ய புதிய தேர்வு வாரி​யம் அமைக்​கப்​படும் என்​பது உள்​ளிட்ட 106 அறி​விப்​பு​களை இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் சீ.ரமேஷ் வெளி​யிட்​டுள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் அறநிலை​யத்​துறை மானிய கோரிக்கை விவாதத்​துக்கு பதிலளித்த அமைச்​சர் ரமேஷ், வெளி​யிட்ட அறி​விப்​பு​கள்: ஆயிரம் ஆண்​டு​களுக்கு முற்​பட்ட 64 கோயில்​களில் ரூ.125 கோடி மதிப்​பீட்​டில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். சிதிலமடைந்த 150 கோயில்​கள் மற்​றும் இதர 152 கோயில்​களில் ரூ.120 கோடி மதிப்​பீட்​டில் திருப்​பணி​கள் நடை​பெறும். கோவை, தேனி, திரு​வள்​ளூர், திருப்​பூர், காஞ்​சிபுரம், திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களில் உள்ள முக்​கிய கோயில்​களில் ரூ.22.25 கோடி மதிப்​பீட்​டில் புதிய ராஜகோபுரங்​கள் கட்​டப்​படும்.

மருதமலை, குன்​றத்​தூர், சமயபுரம், குலசேகரன்​பட்​டினம் ஆகிய கோயில்​களில் பக்​தர்​களுக்​காகப் புதிய மண்​டபங்​கள், இளைப்​பாறு கூடங்​கள் மற்​றும் முடி காணிக்கை மண்​டபம் கட்​டப்​படும். திரு​வண்​ணா​மலை அருணாசலேசுவரர் கோயி​லில் ரூ.8 கோடி​யில் பாது​காப்பு அறை​கள், பாலூட்​டும் அறை​கள் மற்​றும் வரிசை மண்​டபங்​கள் அமைக்​கப்​படும். சிறு​வாபுரி மற்​றும் சமயபுரம் கோயில்​களில் ரூ.9 கோடி​யில் ஒருங்​கிணைந்த வரிசை மண்​டபங்​கள் மற்​றும் சுகா​தார வசதி​கள் ஏற்​படுத்​தப்​படும்.

சென்னை கொளத்​தூர், நுங்​கம்​பாக்​கம், வேளச்​சேரி கோயில்​களில் ரூ.2 கோடி​யில் புதிய மரத்​தேர்​கள் செய்​யப்​படும். மேலும், பழுதடைந்த 25 தேர்​கள் ரூ.16 கோடி​யில் சீரமைக்​கப்​படும். மாநிலம் முழு​வதும் சிதிலமடைந்த 100 கோயில் குளங்​கள் ரூ.40 கோடி மதிப்​பீட்​டில் புனரமைக்​கப்​படும். திருச்​செந்​தூர் சுப்​பிரமணி​ய சு​வாமி கோயி​லில் ரூ.11 கோடி​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கப்​படும்.

பக்​தர்​களின் வசதிக்​காகத் திருச்​செந்​தூரில் 4 சிற்​றுந்​துகளும், நெல்லை சொரி​முத்து அய்​ய​னார் கோயிலுக்கு 2 பேருந்​துகளும் கட்​ட​ணமில்​லாச் சேவை​யாக இயக்​கப்​படும். 20 கோயில்​களுக்கு அவசர கால ஊர்​தி​களும், 38 கோயில்​களுக்​குச் சக்கர நாற்​காலிகளும் வழங்​கப்​படும். கன்​னி​யாகுமரி மற்​றும் மருதமலை​யில் புதிய அன்​ன​தானக் கூடங்​கள் மற்​றும் பிர​சாதம் தயாரிக்​கும் கூடங்​கள் அமைக்​கப்​படும்.

பெண் பணி​யாளர்​களுக்கு மகப்​பேறு விடுப்பு 12 மாதங்​களாக உயர்த்​தப்​படும். ஈட்​டிய விடுப்பு ஒப்​படைப்பு 240 நாட்​களாக அதி​கரிக்​கப்​படும். பணி​யாளர்​களின் வாரிசுகளுக்​குக் கல்​லூரிப் படிப்​பில் முன்​னுரிமை மற்​றும் 50 சதவீதம் கட்​ட​ணச் சலுகை வழங்​கப்​படும். கோயில்​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப புதிய ‘பணி​யாளர் தேர்வு வாரி​யம்’ அமைக்​கப்​படும்.

ஆண்​டு​தோறும் 10ஆ​யிரம் மூத்த குடிமக்​கள் முக்​கிய கோயில்​களுக்கு ஒரு​நாள் ஆன்​மிகப் பயணம் அழைத்​துச் செல்​லப்​படு​வர். 2 ஆயிரம் பக்​தர்​களுக்கு கோயில்​களின் வரலாறு மற்​றும் சிற்​பக்​கலையை அறிய ‘வெற்றி கலை அறி​வு​சார் கோயில் பயணம்’ ஏற்​பாடு செய்​யப்​படும்.

தேக்​கம்​பட்​டி​யில் யானை​கள் நலவாழ்வு முகாம் ரூ.3 கோடி​யில் மீண்​டும் நடத்​தப்​படும். காம​ராஜர் பிறந்​த​நாளான ஜூலை 15-ம் தேதி முக்​கிய கோயில்​களில் பொது விருந்து மற்​றும் சிறப்பு வழி​பாடு நடத்​தப்​படும். மேலும், முரு​க​னின் அறு​படை வீடு​களை முன்​மா​திரி கோயில்​களாக மாற்​றத் திட்ட அறிக்கை தயாரிக்கப் படும்​ என்​பது உள்​ளிட்​ட 106 முக்​கிய அறி​விப்​பு​களை அமைச்​சர்​ வெளி​யிட்​டார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply