தொகுதி பிரச்சினைகளைப் பேச எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை: பிரேமலதா விமர்சனம்

Priya
42 Views
1 Min Read

சட்டப்பேரவை வளாகத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிற விவகாரங்களுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பேசியுள்ளனர்.

மக்கள் நலன் மற்றும் தொகுதிப் பிரச்சினைகளைப் பேச வந்த எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பிட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே அதற்கான பதில்களை அளித்தால் நேர விரயத்தைத் தவிர்க்கலாம்.

குறிப்பாக விளையாட்டுத்துறை சார்பாக கேள்வி எழுப்பப்பட்டால் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கலாம். ஆனால், அனைத்துக்கும் அவரே பதில் அளித்து வருகிறார். பாதி நேரம் அவரே பேசுவதால் மடைமாறுகிறது, நேரம் விரயமாகிறது.

விருத்தாசலம் தொகுதியில் உள்ள என்எல்சி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் போதிய மின்சாரம் கிடைப்பதில்லை

விருத்தாசலம் தொகுதியில் 8 நீதிமன்றங்கள் இருக்கின்றன, ஆனால் அங்கு குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை. அனைத்தும் பழைய கட்டிடங்களாக உள்ளன. இதனால்தான் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கேட்கிறேன்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலைகள், போதை கலாச்சாரம் ஆகியவை உள்ளன. அதை இரும்புக்கரம் அல்ல; எஃகுக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

​இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததே இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம். ​​மின்சாரத்

துறையில் பணியாற்றும் 5,391 கேங்மேன்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply