தவெக அரசைக் கண்டித்து ஆக.16ல் சிவகாசியில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Priya
546 Views
1 Min Read

 சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் மூடலால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும், லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவரும் பட்டாசு உற்பத்தி தொழிலை முடக்கும் வகையில், ஆய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தவெக அரசின் தொழில் விரோத – தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தியும்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாவட்டக் கழக நிர்வாகிகள், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள்/நிர்வகாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply