தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை வலியுறுத்தல்

Priya
658 Views
2 Min Read

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு தவெக அங்கீ​காரத்தை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்ய வேண்​டும் என்று அதி​முக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதி​முக எம்​.பி. இன்​பதுரை சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: அதி​முக சார்​பில் தலைமை தேர்​தல் அதி​காரியை சந்​தித்து ஒரு மனு அளித்​துள்​ளோம். அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா பொதுக்​கூட்​டம் ஒன்​றில் பேசுகை​யில், ‘விசில் சின்​ன​மும் இரட்டை இலைச் சின்​ன​மும் ஒன்​று​தான். அதி​முக​வின் தலை​வர்​கள் எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் விசில் சின்​னத்​தில் வாழ்​கிறார்​கள்’ என்று கூறி​னார்.

இது இந்​திய தேர்​தல் சட்​ட​வி​தி​களுக்கு எதி​ரானது. தேர்​தல் சின்​னம் ஒரு கட்​சி​யின் அடை​யாளத்​துக்​காக​தான் வழங்​கப்​படு​கிறது. அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சிகளுக்கு சின்​னம் வழங்​கும் அதி​காரம் தேர்​தல் ஆணை​யத்​துக்கு மட்​டுமே உள்​ளது.

அதன்​படி, அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கப்​பட்​டுள்​ளது. தற்​போதுள்ள தவெக அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சி​யாக மாறி​யுள்​ளது. அதற்​கும் ஒரு தனிச் சின்​னம் உள்​ளது. அவ்​வாறு இருக்​கும்​போது, இரட்டை இலைச் சின்​னத்தை ஏன் திருட வேண்​டும்.

இது வாக்​காளர்​களை குழப்​பும் செய​லாகும். பொது மக்​கள் இதை எவ்​வாறு புரிந்து கொள்​வார்​கள் என்​றால் அதி​முக​வும் விசிலும் ஒன்று சேர்ந்​து​ விட்​டது என நினைப்​பார்​கள். அதி​முக​வுக்கு வாக்​களிக்க நினைப்​பவர்​கள் விசிலுக்கு வாக்​களித்​து​விடு​வார்​கள். இதை தேர்​தல் ஆணை​யம் கண்​காணிக்க வேண்​டும்.

தவெக செய்​வது மக்​களை திசை​திருப்​பும் செயல். ஜனநாயகத்​தில் ஒரு கட்சி​யை, அதன் கொள்​கைகளை விமர்​சிக்கலாம். ஆனால், ஒரு கட்சியின் சின்​னத்​தை களவு செய்வதை இப்​போது​தான் பார்க்​கிறேன். இது தவறான வழி​காட்டு​தல். எனவே ஆதவ் அர்ஜுனா பேச்சை ஆய்வு செய்து 16ஏ சட்​டப்​படி தவெக​வுக்கு நோட்​டீஸ் கொடுக்க வேண்டும். தேர்​தல் ஆணை​யம் உடனே அவர்​களை அழைத்து விசா​ரணை செய்ய வேண்​டும். குறிப்​பாக தவெக​வுக்கு கொடுத்த அங்​கீ​காரத்தை ரத்து செய்ய வேண்​டும்.

முதலில் அதி​முக​வின் வெற்​றியை திருடி​னார்​கள், பின்னர் எங்களது கட்சியின் எம்​எல்​ஏக்​களை திருடி​னார்​கள், தற்​போது கட்​சியையே திருடு​கிறார்​கள். இந்த விவகாரத்தில் தேர்​தல் ஆணை​யம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்​கள் நீதி​மன்​றத்தை கண்​டிப்​பாக நாடு​வோம்​. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply