“மின் வாரிய அலுவலகத்தில் முதல்வர் செய்தது ரிவ்யூ அல்ல… ரீல்ஸ்!” – ஸ்டாலின் விமர்சனம்

Priya
863 Views
1 Min Read

“மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை; ரீல்ஸ் தான் எடுத்திருக்கிறார்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மின்வெட்டு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தவெக அரசின் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின் வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை. ரீல்ஸ்தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல” என்று பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply