தலைமைச் செயலர் மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Priya
665 Views
1 Min Read

மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இடது​சாரி கட்​சிகள், கரப்​பான் பூச்சி அமைப்​பினர் நடந்​தும் போராட்​டங்​களில் மாணவர்​கள் பங்​கெடுப்​பதை தடுக்​கும் வகை​யில் பள்​ளிக்​கல்​வி, உயர்​கல்​வி, காவல்​துறை, மாவட்ட நிர்​வாகம் இடையே ஒருங்​கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு கல்​லூரிக் கல்வி இயக்​குநர் சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

தலை​மைச் செயலர் எம்​.​சாய்குமார்தான் இதை வலி​யுறுத்​தி​யுள்​ளார். அதே​போல் குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் பிரச்​சினை குறித்து சட்​டப்​பேர​வை​யில் பேசிய வரு​வாய்த்​துறை அமைச்​சர் நடவடிக்கை எடுத்​துக் கொண்​டிருக்​கிறோம் என்று குறிப்​பிட்​டார்.

ஆனால், பயிற்சி முடிந்து விட்​ட​தால் பேரிடர் மேலாண்மை ஆணை​யரகத்​தில் பணி​யில் சேர்​வதற்​காக சம்​பந்​தப்​பட்ட வட்​டாட்​சி​யர் விடுவிக்கப்​பட்​ட​தாக ஆட்​சி​யரின் குறிப்​பு கூறுகிறது.

அடுத்​தடுத்து இடது​சா​ரி​கள் குறிவைக்​கப்​படு​வது தற்​செய​லானது அல்ல. தலை​மைச் செயலர், குஜிலி​யம்​பாறை வட்​டாட்​சி​யர் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும்.

இதை வலி​யுறுத்தி அனைத்து மாவட்​டங்​களி​லும் இன்று (ஆக.22) கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply