பரிதாப பாகிஸ்தான்: 135 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி – ENG vs PAK

Priya
666 Views
2 Min Read

லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து பரிதாப நிலைக்குரியதானது. இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

238 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸில் இறங்கிய பாகிஸ்தான் படுமோசமாக ஆடி 135 ரன்களுக்குச் சுருண்டது. வெறும் 37.3 ஒவர்களே தாக்குப் பிடித்தது. இன்னும் சொல்லப்போனால் 2-ம் நாள் காலை 4 மணி நேரம் மழை பெய்யவில்லை எனில் ஆட்டம் 3-ம் நாளுக்கே வந்திருக்காது என்று சொல்லலாம். இதே நிலைதான் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு நிகழ்ந்தது.

195 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து, வேகமாக 400 ரன்களைக் கடந்து முன்னிலையை 238 ரன்களாக உயர்த்தியது. ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தது இங்கிலாந்தின் ஸ்கோரை வேகமாக உயர்த்த உதவியது.

238 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே ஆர்ச்சர் அதிர்ச்சி கொடுத்தார். இமாம்-உல்-ஹக் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அசான் அவைஸ் 9 ரன்களிலும், அப்துல்லா ஷபீக் 16 ரன்களிலும் வெளியேற, பாகிஸ்தான் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.

ராபின்சனின் பந்துவீச்சில் ஷபீக் 18 ரன்களில் வெளியேறினார். மதிய உணவு இடைவேளையில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

மதிய உணவுக்குப் பிறகு இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் டங் மற்றும் ஆலி ராபின்சன் இணைந்து பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை சிதறடித்தனர். சவுத் ஷகீல், ஷான் மசூத், கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 76 ரணங்கள் என மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

Advertisement

தொடர்ந்து ராபின்சனும் விக்கெட்டுகளை வீழ்த்த, பாகிஸ்தானின் கடைசி நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வான் 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து சிறிது போராடினார். ஆனால், அவரது ஆட்டமும் நீடிக்கவில்லை. இறுதியில் பாகிஸ்தான் 135 ரன்களுக்கு சுருண்டு, இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர், டங் மற்றும் ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த கஸ் அட்கின்சன் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாக நிலைகுலையச் செய்தனர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே இங்கிலாந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாக இருந்த நிலையில், 3-வது நாளிலேயே போட்டி முழுமையாக முடிவுக்கு வந்தது.

ஜோ ரூட்டின் அட்டகாசமான கற்பனை வளம் மிக்க களவியூகம், மேம்பட்ட கேட்சிங் ஆகியவை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக இங்கிலாந்து அணிக்கு அமைந்தன. ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் நிச்சயமாக பாபர் அசாமின் தேவையை வலியுறுத்துகிறது. வங்கதேசத்திடமிருந்து ஒரு பக்கத்தை உருவி மரபான பேட்டிங்கை ஆடி அதாவது நல்ல டெக்னிக்குடன் மீண்டு வந்தால்தான் இனி பாகிஸ்தானுக்கு இந்தத் தொடரில் மட்டுமல்ல எந்தத் தொடரிலுமே வாய்ப்பு.

Share This Article
Leave a Comment

Leave a Reply