ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பள நாயுடு, நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆந்திரத் தலைநகரான ‘அமராவதி’ குறித்து தான் தொகுத்துள்ள சிறப்புப் புத்தகத்தைக் குடியரசுத் தலைவரிடம் அப்பள நாயுடு வழங்கினார்.
அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை ஆவலுடன் பார்வையிட்ட திரவுபதி முர்மு, மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு இத்திட்டங்களே சான்று என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
“தலைநகர் அமராவதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகச் சிறப்பாக உருவாக்கி வருகிறார். வருங்காலத்தில் இது ஒரு மிகச் சிறந்த உலகத் தரம் வாய்ந்த தலைநகராக உருவெடுக்கும். சந்திரபாபு நாயுடு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அவரே முகவரியாகத் திகழ்கிறார்” எனப் புகழாரம் சூட்டினார்.

