ரீ-ரிலீசிலும் சாதிக்கும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ – உலகளவில் ரூ.720 கோடி வசூல்

Priya
542 Views
1 Min Read

மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம், கூடுதல் காட்சிகளுடன் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வசூல் மழை பொழிந்து வருகிறது.

திரையரங்குகளில் மீண்டும் வெளியான இத்திரைப்படம், வட அமெரிக்காவில் மட்டும் 3,060 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வார இறுதியில் $26 மில்லியன் (சுமார் ரூ.218 கோடி) வசூலித்து பாக்ஸ் ஆபீசில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் $60 மில்லியன் வசூலித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக $86 மில்லியன் (சுமார் ரூ.720 கோடி) வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் ஒரே வார இறுதியில் ‘தி ஹார்ட் ஆஃப் தி பீஸ்ட்’ (20மில்லியன்)மற்றும் ‘ஃபார்காட்டன் ஐலேண்ட்’ (12.8 மில்லியன்) ஆகிய புதிய திரைப்படங்களின் வசூலைப் பின்னுக்குத் தள்ளி அவெஞ்சர்ஸ் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது.

3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தச் சிறப்பு பதிப்பில் , ஸ்டீவ் ரோஜர்ஸ், லோகி ஆகிய கதாபாத்திரங்கள் அடங்கிய இதுவரை காணாத போஸ்ட் கிரெடிட் காட்சிகள் மற்றும் மார்வெலின் பிதாமகர் ஸ்டான் லீக்கான சிறப்பு அஞ்சலிக் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, வரவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்துக்கான சிறப்பு முன்னோட்டக் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். வரும் டிசம்பர் 18 அன்று வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்துக்கான எதிர்பார்ப்பை இந்த ‘எண்ட்கேம் என்கோர்’ வெற்றி பலமடங்கு உயர்த்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply