“உல​கின் நம்​பக​மான உற்​பத்தி மைய​மாக மாறி வரும் இந்தியா” – பிரதமர் மோடி

Priya
705 Views
2 Min Read

உலக நாடு​கள் புதிய மற்​றும் நம்​பக​மான உற்​பத்தி மையங்​களை எதிர்​பார்ப்​ப​தாக​வும், அந்​தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்​தியா தன்​னைத் தொடர்ந்து தயார்​படுத்தி வருவதாகவும் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் 3 நாட்​கள் நடை​பெறும் செமிகான் இந்தியா மாநாடு மற்றும் கண்​காட்​சியை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: உலகளா​விய புதிய உற்​பத்தி சவால்​களை எதிர்​கொள்​ளக்​கூடிய நம்​பக​மான இடமாக இந்​தியா மாறி​யுள்​ளது. இன்​றைய சூழலில் உலகம் புதிய, நம்​பக​மான உற்​பத்தி மையங்​களை எதிர்​பார்க்​கிறது. அதற்​கான தேவையை இந்​தியா பூர்த்தி செய்ய தயா​ராகி வரு​கிறது.

ஏஐ தொழில்​நுட்​பத்​துக்​கான தேவை அதி​கரித்து வரும் சூழலில், வெறும் டிரான்​சிஸ்​டர் அளவை மட்​டும் கவனத்​தில் கொள்​ளாமல், நினைவக அமைப்பு மற்​றும் வெப்ப மேலாண்மை உள்​ளிட்ட முழு​மை​யான ஒருங்​கிணைந்த அமைப்​பு​களில் கவனம் செலுத்த வேண்​டியது அவசி​யம். ஒரு​புறம் இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் அதிவேக​மாக வளர்ந்து வரு​கிறது; மறு​புறம் நாட்​டின் மீதான சர்வதேச சமூகத்​தின் நம்​பிக்​கை​யும் அதி​கரித்து வரு​கிறது.

சவால்​கள் நிறைந்த உலகளா​விய சூழலிலும் இந்​தியா 7.8 சதவீத பொருளா​தார வளர்ச்​சி​யைப் பதிவு செய்​துள்​ளது. அதே வேளையில், ஜப்​பானின் கடன் தரநிர்ணய அமைப்​பும் இந்தியாவின் இறை​யாண்​மைக்​கான தரவரிசையை உயர்த்தியுள்ளது. வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யாவை உரு​வாக்​கும் லட்சி​யத்​துடன் நாட்​டின் ஒவ்​வொரு குடிமக​னும் பணி​யாற்றி வருகின்​றனர். இந்​தி​யா​வின் செமிகண்​டக்​டர் கட்​டமைப்பு மிகவேக​மாக விரிவடைந்து வரு​கிறது. இது கண்​டு​பிடிப்​பு​கள், முதலீடு​கள் மற்​றும் வளர்ச்​சிக்கு புதிய வாய்ப்​பு​களைத் திறந்​து​விட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் ஆராய்ச்சி செய்து வரும் இளம் திறமை​யாளர்​களும், வெளி​நாடு​களில் உள்ள இந்​திய ஆராய்ச்​சி​யாளர்​களும் நாட்​டின் அதிநவீன தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் இணைய முன்வர வேண்டும். இவ்​வாறு பிரதமர் பேசி​னார். டெல்லி யசோபூமி மாநாட்டு மையத்​தில் செப். 17 முதல் 19 வரை மூன்று நாட்​கள் நடை​பெறும் ‘செமி​கான் இந்​தியா 2026’ கண்​காட்​சி​யில் 300 சர்வதேச நிறு​வனங்​கள் மற்​றும் 50-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

ஜப்​பான், தென் கொரி​யா, மலேசி​யா, நெதர்​லாந்​து, சிங்​கப்​பூர் மற்​றும் ஸ்வீடன் ஆகிய 6 நாடு​களின் பிரத்​யேக அரங்​கு, 12 இந்திய மாநிலங்​களின் அரங்கு மற்​றும் ஸ்டார்ட்​-அப் நிறுவனங்களுக்​கான பிரத்​யேக அரங்​கம் ஆகியவை இக்​கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்​ளன. சர்​வ​தேச மற்​றும் உள்​நாட்டு நிறுவனங்​கள், கொள்கை வகுப்​பாளர்​கள், முதலீட்​டாளர்​கள் மற்றும்​ மாணவர்​கள்​ இதில்​ பெரு​மளவில் பங்கேற்றுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply