விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாசிக்கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் கடை தங்க மோதகம் இனிப்பை விற்பனை செய்து வருகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் ஆகும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் கடை, ஆண்டுதோறும் தங்க மோதகங்களை தயாரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த ஆண்டும் தங்க மோதகத்தை சாகர் ஸ்வீட்ஸ் அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு கிலோ விலை ரூ.27 ஆயிரம். உண்ணக்கூடிய தங்க முலாம் பூசப்பட்ட இந்த இனிப்பு, சமூக வலைதளங்களில் வைரலா்னது.
இந்தக் கடை, கடந்த ஆண்டு, ஒரு கிலோ ரூ.20 ஆயிரத்துக்கும், 2021-ம் ஆண்டில் ஒரு கிலோ ரூ.12 ஆயிரத்துக்கும் தங்க மோதகங்களை விற்பனை செய்தது.
மேலும், உண்ணக்கூடிய வெள்ளி முலாம் பூச்சுடன் தயாரிக்கப்பட்ட வெள்ளி மோதகங்களையும் விற்பனை செய்தது. தங்கத்தைப் போலவே, தங்க மோதகங்களின் விலையும் கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

