சல்மான் கான் – நயன்தாரா படத்தின் தலைப்பு ‘மான்ஸ்டர்’

Priya
63 Views
1 Min Read

ல் ராஜூ தயாரிப்பில் சல்மான் கான் அடுத்து நடிக்க இருக்கும் படத்துக்கு ‘மான்ஸ்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படம், அடுத்த ஆண்டு (2027) பக்ரீத் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான உருவாக்கம், சல்மான் கானின் பான் இந்தியா வெளிச்சம், நயன்தாரா நாயகி போன்றவை அடுத்த ஆண்டு பக்ரீதில் வெளியாக இருக்கும் பெரிய இந்திப் படங்களில் ஒன்றாக இந்தப் படத்தை எதிர்பார்க்க வைத்துள்ளது.

இதற்கிடையே சல்மான் கான் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள இந்தி பிக் பாஸ் 20-ஐ தொகுத்து வழங்க உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply