மாணவர்கள், இளைஞர்களின் நியாயமான உரிமைகளை அரசு மதிக்கும்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் உறுதி

Priya
576 Views
1 Min Read

மாணவர்கள், இளைஞர்​களின் நியாய​மான உரிமை​களை அரசு மதிக்​கும் என்று சட்​டப்​பேர​வை​யில் உயர்கல்வித் துறை அமைச்​சர் பெ.​விஸ்​வ​நாதன் கூறி​னார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று நேரமில்லா நேரத்​தில் இந்திய கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ மாரி​முத்து பேசியதாவது:

உயர் கல்​வித் துறை இயக்​குநர் அனுப்​பியுள்ள சுற்​றறிக்​கை​யில், ‘உரிமை​களுக்​காக போராடும் மாணவர்​கள், குறிப்​பாக இடது​சாரி மாணவர்​களை அடை​யாளம் கண்டு அவர்​கள் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகளை உடனடி​யாகநடவடிக்கை குழு​வுக்கு அனுப்பிவைக்க வேண்​டும்’ என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இது​போல திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் ஒரு வட்​டாட்​சி​யர், உரிமைக்​காக போராடும் சுதந்​திர நாட்​டில் அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு புறம்​பாக ஒரு சுற்​றறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர்கள் கூறியதாவது:

அமைச்​சர் செங்​கோட்​டையன்: வரு​வாய்த் துறை தலை​மை​யிடத்​தில் இருந்து ஒரு சர்வே நடத்​த குஜிலி​யம்​பாறைக்கு வட்​டாட்​சி​யரை அனுப்​பினோம்.

அவர் தேவை​யின்றி இது போன்ற கடிதங்​களை எழுதி அதன்மூலம் இந்​திய கம்யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளில் யார், யார் இருக்​கிறார்​கள் என்று புள்​ளி​விவரத்தை கேட்​டுள்​ளார்.

இது அரசின் கவனத்​துக்​கும், எனது கவனத்​துக்​கும் வந்​தவுடன், அந்த வட்​டாட்​சி​யர் உடனடி​யாக பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார். அவர் மீது தற்​போது நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்.

அமைச்​சர் பெ.​விஸ்​வ​நாதன்: மாணவர்​களின் போராட்​டம் தொடர்​பான நடவடிக்​கைகள் குறித்து முதல்​வரின் கவனத்​துக்கு உடனே கொண்டு செல்​லப்​பட்​டது.

அனைத்து அரசு கல்​லூரி​களின் கல்​விச் சூழல், ஒழுங்கு அமை​தியை பராமரிப்​பது, உறுதி செய்​வதை முன்​னிட்டு அனைத்து கல்​லூரி முதல்​வர்​களுக்​கும் சுற்​றறிக்கை அனுப்​பப்​பட்​டது.

அதில் தவறு​தலாக சில வாசகங்​கள், குறிப்​பிட்ட கட்​சிகள் மற்​றும் அமைப்​பு​கள் பற்றி இருந்​தன. இதை அறிந்து கல்​லூரி இயக்​குநரகம் உடனடி​யாக அந்த சுற்​றறிக்​கையை திரும்​பப் பெற்​றது.

எவ்​வித உள்​நோக்​க​மும் இன்றி முற்​றி​லும் கல்வி நிறு​வனங்​களில் ஒழுங்கு அமை​தியை பராமரிக்​கும் நோக்​கில் இது அனுப்​பப்​பட்டது.

மாணவர்​கள், இளைஞர்​களின் உரிமையை கட்​டுப்​படுத்​தும் நோக்​கம் அரசுக்கு இல்லை. அவர்களது நியாய​மான உரிமை​களை இந்த அரசு மதிக்​கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply