தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம்

Priya
1245 Views
2 Min Read

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்துவந்த நிலையில், சென்னையில் இன்று (செப்.3) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.

இந்தச் சூழலில், அண்மையில் வெளியிட்ட காணொலியில், “நாட்டின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. இந்​தி​யர்​களின் கடின உழைப்​பால் இந்த சாதனை சாத்​தி​ய​மாகி உள்ளது. இதற்​காக நாட்டு மக்​கள் அனை​வருக்​கும் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த நேரத்​தில் சுதேசி கொள்​கைகளை இந்​தி​யர்​கள் அனை​வரும் கடை​பிடிக்க வேண்​டும். உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். தேவை​யில்​லாமல் வெளிநாட்டு பயணங்​களை மேற்​கொள்​ளக் ​கூ​டாது. வெளி​நாடு​களில் திரு​மணங்​களை நடத்​தக் ​கூ​டாது. தேவை​யில்​லாமல் தங்​கத்தை வாங்​கக் ​கூ​டாது.” எனப் பேசியிருந்தார்.

“பிரதமர் மோடி கூறும் ‘தற்சார்பு இந்தியா’ என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல; அது நாட்டின் அந்நியச் செலவாணியைப் பாதுகாக்கும் மந்திரச் சொல். நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் நமது ரூபாயின் மதிப்பைக் குறைத்து, டாலரின் கரங்களை வலுப்படுத்துகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே ‘தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்” என்று நிபுணர்களும் கூறியிருந்தனர்.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை குறைந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரு.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240-க்கும், பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,13,920-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply